பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் "நன்றி" : Thanks for Blog support 2011


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்.
குறுகிய காலத்தில் ஆயிரம் (1248 )  பின் தொடர்பவர்களையும் தினமும்
ஆயிரத்திற்கும் அதிகமான ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி 6 லட்சம் ஹிட்ஸுகளை கடக்க செய்த அனைத்து வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த ஆயிரம் , ஆயிரம் நன்றிகளை மகிழ்ச்சியுடன் சமர்பிக்கிறேன் !

"நன்றி" வளர்ந்து வரும் நாகரீகத்தில்
மறைந்து வரும் ஒரு அழகிய தமிழ் சொல்
 யார்யாற்கோ எதற்காகவோ எப்படியோ எல்லாம்
தினம் தினம் நன்றி சொல்கிறோம் -ஆனால்
நம்மை பெத்ததற்காய் நம் பெற்றோரிற்கு
என்றாவது நன்றி சொல்லி இருக்கிறோமா?
இல்லை நமக்கு கல்வி அறிவு ஊட்டிய
ஆசான்களுக்கு சொல்லி இருக்கிறோமா ??
இன்னும் காலம் முழுவதும் நம்மோடு
கலந்து வாழ வைக்கும் தென்றல் காற்று..
வாழும் போதும் மாளும் போதும்
நம்மை தாங்கும் பூமித்தாய் ...
நாளெல்லாம் ஒளிதரும் கதிரவன்...
நாம் வாழ உணவுதரும் விவசாயி
இப்படி எத்தனையோ ...நன்றிகளை
சொல்ல வேண்டிய ;சொல்ல மறந்த
நன்றிகளை ஒருதரமேனும்
சொல்ல வேண்டுமென நீ
நினைத்து பார்த்ததுண்டா??
இயன்றால் சொல்லிவிடு இன்றே
இனி வரும் தலைமுறைகள்
நன்றியா ! அப்படி என்றால் ? என்று
உன்னைப் பார்த்துக் கேட்குமுன் .!39 மறுமொழிகள் to பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் "நன்றி" : Thanks for Blog support 2011 :