கொட்டிக் கிடக்குது அரிய குட்டித் தகவல்கள்:Panithuli shankar indru oru thagaval Interesting & Informative Articles : +18 (17.03.2011)

னைவருக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். குட்டிக் குட்டித் தகவல்கள் கொடுத்து அதிக நாட்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இந்த நீண்ட இடைவெளியை இந்த குட்டித் தகவல்கள் ஆயிரம் என்றப் பதிவு பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். சரி நண்பர்களே..!! இனி நாம் தகவலுக்கு வரலாம். 

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு கண்கள்தான் இருக்கும். ஆனால் ஒரு மனிதனுக்கு எண்ண இயலாத கண்கள் இருந்தது என்றால் நம்புவீர்களா !? என்ன நண்பர்களே..!! முதல் தகவலே ஒரு வியப்பானக் கேள்வியில் தொடங்கியதை எண்ணி குழப்பமாக இருக்கிறதா சொல்கிறேன். நம் அனைவருக்கும் தெரிந்த வரை மிகப் பெரிய இதிகாசங்களில் சில ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். இதை படிப்பதற்கும் புரிந்துகொளவதற்குமே பல ஆண்டுகள் பிடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று இந்த இரண்டு இதிகாசங்களும், வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. இரண்டுமே கடவுளை நாயகர்களாக கொண்ட இதிகாசங்கள். ஆனால், ஒருவரே இரண்டு இதிகாசங்கள் ஆங்கிலத்தில் கவிதை வடிவத்தில் மொழிபெயர்த்தார் என்றால் நம்புவீர்களா..?!!!

ம் நண்பர்களே..!! அவர்தான் ”ஜான் மில்டன்” (JOHN MILTON) என்பவர். இதில் இன்னும் ஒரு மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் இவருக்கு சிறு குழந்தையில் இருந்தே கண்கள் தெரியாது என்பதுதான். இரண்டு கண்கள் உள்ள நாமே சில வார்த்தைகளை சரியாக எழுத முடியாமல் திக்குமுக்காடும் நிலையில் ஒரு பார்வை இல்லாத மனிதர் உலகத்தின் மிகப் பெரிய இதிகாசங்களை மொழிபெயர்த்து எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த படியான எழுத்தாளார் யார் என்று கேள்வி வந்தால்... அதற்கு பதில் ஜான் மில்டன் JOHN MILTON என்பார்கள். நாடகத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ஆங்கிலத்தில் சிறந்த கவிஞர் ஜான் மில்டன் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த எழுத்தாளர்.

வரின் திறமையில்தான் வியப்பு என்றால் இவரின் பெயரிலும் ஒரு மிகப்பெரிய வியப்பு புதைந்துள்ளது என்று சொல்லலாம். ஆம். அது என்னவென்றால் பொதுவாக நமக்கு தெரிந்து, குழந்தைகளுக்கு தாத்தாவின் பெயரையோ அல்லது ஏதேனும் தலைவர்களின் பெயரையோ அல்லது சிறந்த அறிஞர்களின் பெயரையோ வைப்பதுதான் பார்த்து இருப்போம். ஆனால் இவருக்கு அவரின் தந்தையின் பெயரான ”ஜான் மில்டன்” என்பதையே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ந்த மந்திர மனிதனுக்கு கண்கள் மட்டும்தான் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் இவர் எழுதிய ”பாரடைஸ் லாஸ்ட்” என்ற புத்தகத்தை படிக்காத கண்களே கிடையாது என்று சொல்லலாம்.

                           @@@@@@@@@@@@@@@@@@
வ்வொரு மனிதனுக்கும் கேள்வி கேட்கும் அறிவுதான் அவனை இன்னும் அதிக அறிவுடையவனாக மாற்றும் என்கிறது ஒரு தகவல் அப்படி நாம் தினந்தோறும் படிக்கும் அல்லது கேட்கும் எத்தனையோ வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் அனைவரும் தேடும் ஒன்று அகராதி (டிக்ஸ்னரி) என்று சொல்லலாம். (நம்ம ஊர்ல அகராதி பிடிச்சவன் என்று சொன்னால் திமிர்பிடிச்சவன் என்றும் மதிக்க தெரியாதவன் என்றும் பொருள்படும். அதை இங்க மறந்துருவோம் ஹி....ஹி..ஹி....)

ரி அகராதிக்கும் இந்த தகவலுக்கும் என்னத் தொடர்பு என்று நீங்கள் எண்ணலாம் சொல்கிறேன். இன்று நாம் ஒவ்வொருவரும் எளிதாக பல வார்த்தைகளின் அர்த்தங்களை அறிந்துகொள்ளும் இந்த அகராதியை உருவாக்கியவருக்கு ஒரு காலத்தில் அம்மா அப்பா என்பதற்கே விளக்கம் தெரியாமல் மந்தமாக இருந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக யாரையும் குறைவாக எடை போட்டு விடாதீர்கள். ஒருவேளை அவர்களே பிற்காலத்தில் இந்த உலகத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும், மாறப்போகும் விந்தைகள் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ்ந்துபோகலாம்.


                               @@@@@@@@@@@@@@@@@@@@

ம்மில் பலருக்கு நாம் வசிக்கும் வீட்டிலிருந்து பக்கத்தில் இருக்கும் ஏதேனும் பிரபலமான இடத்திற்கு எவ்வளவு தூரம் என்றுக் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இந்தியாவின் மொத்த சாலைகளின் தொலைவுகளைப் பற்றிக் கேட்டால் சொல்லவே தேவை இல்லை. அய்யா சாமி ஆளை விடுங்க என்று தலைதெறிக்க ஓடத் தோன்றும்.

னி அந்தக் கவலை வேண்டாம். இதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள மொத்த சாலைகளின் தூரத்தையும் கணக்கெடுத்துவிட்டார்கள். இதோ அறிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள மொத்த சாலைகளின் தூரம் 42  இலட்சம் கி.மீ உள்ளதாம். இந்தக் கணக்கெடுப்பு கடந்த வருடம் எடுக்கப்பட்டதுதான். ஆனால் இன்றைய நிலையில் எத்தனை சாலைகள் உயிர் பெற்றதோ புதிதாக யாருக்குத் தெரியும் அதையும் விரைவில் அளந்துவிடலாம் காத்திருங்கள்.

ன்ன நண்பர்களே..!! இன்றையக் குட்டிக் குட்டித் தகவல்கள் உங்களின் உள்ளங்களை குதூகலிக்க செய்திருக்கும் என்று நம்புகிறேன். அதிக பணிச்சுமை அதுதான் தொடர்ச்சியாகப் பதிவுகள் தர இயலாத நிலை. மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
 * * * * * *

22 மறுமொழிகள் to கொட்டிக் கிடக்குது அரிய குட்டித் தகவல்கள்:Panithuli shankar indru oru thagaval Interesting & Informative Articles : +18 (17.03.2011) :