காதல் ரணங்கள் : Panithuli shankar காதல் கவிதை Kadhal Kavithai in tamil (10+03+2011)

தேவைகள் தீர்ந்து
போகாத தேகத்தில் தாகமென
நீள்கிறது நமக்கான காதல்...!!

ட்டி வைக்க இயலாத
புன்னகையின சத்தமாய் குவிந்துகிடக்கிறது
 இதழ்கள் எங்கும்   ஒரு சோகம்...!!

புரிந்துகொள்ள
இயலாத உரையாடல்களின
தொகுப்புகள் எல்லாம் இன்னும்
உறங்கிக் கிடக்கிறது என் மௌனத்தில்... !!

 ரணங்களின் உச்சமாய்
கிளிஞ்சலென சிதறிக் கிடக்கிறது
நம் இருவருக்குமான
எதிர்பார்ப்புகள்....!!!  

வார்த்தைகள் பல தொடுத்து
சேர்த்து வைத்த உரையாடல்கள் எல்லாம்
காத்துக்கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில்
உனது வருகைக்காக..!!!

நீ அருகில் இருப்பதில்
இல்லாத மகிழ்ச்சியை
தனிமையில் உன்னை
நினைத்தலின் உச்சத்தில் உணர்கிறேன் .

ந்தன் விடை தரும்
பார்வை ஒன்றின் உச்சத்தில்
துடிதுடித்து மெல்ல அமைதி கொள்கிறது
குட்டி இதயம் ஒன்று உள்ளுக்குள்...!!

யுத்தம் செய்து சத்தமின்றி
இறந்து போவதை விட
யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்
கரைந்து போவதில் எனக்கு மகிழ்ச்சியே !
* * * * * *

26 மறுமொழிகள் to காதல் ரணங்கள் : Panithuli shankar காதல் கவிதை Kadhal Kavithai in tamil (10+03+2011) :