நினைவுச் சுவடுகள் : panithuli shankar Ninaivuch suvadugal kadhal kavithaigal +18 ( 25+03+2011)

பூக்களின் முகவரி
முதல் முறை அறிந்துகொண்டேன்
அவளின் முதல் புன்னகையில்...!!
யாரும் இல்லாத புதிய பிரபஞ்சம்
திரும்பும் திசையெங்கும் சிதறிக் கிடக்கும்
மேகக் கூட்டங்களாய் அவளின் பிம்பங்கள்..!!

ண்ணித் தீர்க்க இயலாத
சந்திப்புகளின் மத்தியில்
முத்திக்கொண்டது ஊடல்..!!.

ன்றாய் சந்தித்து மகிழ்ந்த
கடற்கரைகளில் எல்லாம்
தனிமை தாங்கி காட்சி தருகிறது
மணல் குவியல்கள்..!!

றக்க முயற்சித்து தோற்றுப்போகிறேன்
அவளுடன் பேசிக் கழிந்த
அந்த அழகிய நிமிடங்களை..!!
உடைந்து போன
கண்ணாடி சில்லில் எல்லாம்
அவளின் பிம்பம் தேடி
தொலைந்துபோக அழைக்கிறது
அவள் இல்லாத தனிமை ஒன்று...!!!

யாருமற்ற தனிமையின் நிழல் தேடியே
மெல்ல இளைப்பாறிக் கொள்கிறது
அவளுக்கான தேடல்கள்....!!

றங்கிப்போனதாய் காட்சி தரும்
விழிகளின் ஓரத்தில் எல்லாம்
வலிகள் சுமந்தபடி சில கண்ணீர்த் துளிகள்..!!

கால ஓட்டத்தில் மறந்துபோவாய்
என்று சொல்லி
பிரிந்து சென்றாள்

காலப் பெருவெளியில் வெகு தூரம்
கடக்கத் தொடங்கிவிட்டது இந்த தேகம்
அவளின் நினைவுகள் சுமந்த படி..
இன்னும் நீண்டு போகட்டும்
அவள் இல்லாத இந்தத் தனிமை
 நான் இறந்துபோகும் வரை  !!!.....
* * * * *

19 மறுமொழிகள் to நினைவுச் சுவடுகள் : panithuli shankar Ninaivuch suvadugal kadhal kavithaigal +18 ( 25+03+2011) :