இன்று ஒரு தகவல் : பணம் தோன்றிய வரலாறு : world first currency history + 18 (01+03+2011)


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு தகவலின் வாயிலாக நாம் பார்க்க இருக்கும் தகவல் பணம். இந்த பணத்தை விரும்பாதவர்கள் உலகத்தில் இன்று யாரும் இல்லை. பழங்காலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு ”பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்று. ஆனால் அந்த பழைய மொழி இன்று மாறி ”பணம் மெத்தையில் குணம் பாடையில் ” என்று சொல்லும் அளவிற்கு பணம் என்ற காகிதங்களின் மதிப்பு உலகத்தின் உயர்ந்த நிலையில் உள்ளது. மனிதனின் ஆசைகள்தான் இந்த உலகத்தில் தோன்றி இருக்கும் அனைத்து அதிசயங்களுக்கும் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் அதே ஆசைகள்தான் மனிதனின் அழிவிற்கும் காரணம் என்பதை நம்மில் பலர் அறியவில்லை. இந்த ஆசைகளில் இன்று முதன்மையில் இருப்பது பணம் என்றுதான் சொல்லவேண்டும். இனி வரும் காலத்தில் காசு இல்லாத மனிதன் சுவாசிப்பது கூட சாத்தியமற்றுப்  போகும் நிலை வரலாம் .
ரி  இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் விசயத்திற்கு வருவோம் . இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இப்பொழுதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சிகளும் உருவாகத் தொடங்கிவிட்டன . நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும்.

 நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக நானையங்களும், காகித நோட்டுகளும் செலாவணி என்று அழைக்கப்படுகிறது. வர்த்தகத் துறையின் அஸ்திவாரமே இந்த செலாவணி தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு தானியங்களையும் காய்கறிகளையும் பண்ட மாற்றாகக் கொடுத்து வாங்கி வந்தனர். ஆனால் காய்கறிகளும் தானியங்களும் நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காமல் போகவே வேறு வழியின்று தங்கம் மற்றும் பல உலோகங்களான கட்டிகளைக் கொடுத்துதான். தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிவந்தனர் .

தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது. இந்த உலோக பரிமாற்றத்திலும் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது . அது என்னவென்றால் தங்கம் போன்ற உலோகங்கள் சுத்தமானதா இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பயன்படுத்தப் படும் உரசிப் பார்க்கும் முறை மிகவும் கடினமாகத் தோன்றியது அனைவருக்கும் . இவ்வளவு வளச்சிகள் பெற்றப் பிறகும் இன்னும் பல கிராமங்களில் தானியங்கள் காய்கறிகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கும் முறை வழக்கில் இருந்துதான் வருகிறது என்பது மட்டும் திண்ணம்.


கி.மு 700. ம் ஆண்டு லிடியா நாட்டு மன்னன் கயிஜாஸ் என்பவர் எலேக்டிரம் என்னும் நாணயத்தை அறிமுகப்படுத்தினார். 25 சதவீதம் வெள்ளியும், 75 சதவீதம் தங்கமும் கலந்து இதை உருவாக்கினார். இந்த நாணயம் அவரை விதையின் உருவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் இந்த நாணயம் நீண்ட நாட்கள் அதிக வசதியை ஏற்படுத்தியது. கிரேக்க வர்த்தகர்கள் இதன் வசதியை உணர்ந்து இந்த நானையத்தை பயன்படுத்தத் தொடங்கினர் . இதில் இருந்து மிகக் குறுகிய காலத்திலயே பல நாடுகளுக்கும் நாணய செலாவணி முறை பரவத் தொடங்கியது. நாட்கள் செல்ல செல்ல தங்கத்துக்கு பதிலாக செம்பு பயன்படுத்தத் தொடங்கினார்கள். வியாபாரத்தில் அதிக அளவில் நாணயங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்த போதும். அதிக அளவிலான நானையன்களை தூக்கி செல்வதில் சிரமங்கள் இருந்தது . அதன்பிறகுதான் இதை சரி செய்யும் ஒரு முயற்சியாக முதன் முதலில் காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டு முறையை கொண்டு வந்தனர். இதில் சீனர்கள்தான் முதன் முதலில் காகித செலாவணி முறையை பணமாக கொண்டுவந்தார்கள் என்று சொல்லவேண்டும்.

 
 கி மு 119 ம் ஆண்டிலியே காகித நோட்டுக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் சீனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாணயம் மிக்க ஒரு வங்கி காகிதத்தில் அச்சடித்துள்ள தொகையை தருவதாக அளிக்கும் உறுதி மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் காகித நோட்டு பணம் புழக்கத்திற்கு வந்தது . கி.பி 1661 ம் ஆண்டு ஜூலை மாதம் சுவீடன் நாட்டில் ஸ்டாக் ஹோமில் உள்ள ஒரு வங்கிதான் உலகத்திலியே முதன் முதலில் அனைவரும் ஏற்றுகொள்ளும் வகையில் காகிதத்தில் அச்சிட்டு பணம் என்று வெளியிட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள். இன்று காகித நோட்டுக்கள் வளர்ச்சி அடைந்து காசோலைகள், கடன் அட்டைகள் என்று பல்வேறு வடிவில் உருமாற்றம் பெற்று இன்று உலகமெங்கும் கை மாறத் தொடங்கிவிட்டது. ”கைக்கு கை மாறும் பணமே உன்னைக் கைப் பற்ற நினைக்கிறது மனமே” என்று.
 
ன்ன நண்பர்களே..!! இன்றையத் தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
 

28 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் : பணம் தோன்றிய வரலாறு : world first currency history + 18 (01+03+2011) :