பனித்துளி சங்கரின் கவிதைகள் : சின்ன சின்ன மழைத்துளி : chinna chinna mazhai thuli (Panithuli sangar tamil kavithaigal )

நேற்றைய இரவு எதிர்பாராத மழை
உடைபட்ட வானத்தின் கீழ்
 குடையின்றி ஒரு தேகமாய்
முகம் நிமிர்த்தி கண்கள் மூடி
மழைத்துளிகளை தேகம் முழுவதும்
ஏந்திக்கொண்டதில்தான்  எத்தனை ஆனந்தம் !?
ரவு முழுவதும் நனையத் துடித்தும்
சில வினாடிகளில் கனவாகிப் போனது
அந்த அழகிய நிஜம் .!
  சில வினாடிகளே வந்து சிந்தி சென்றாலும்
இன்னும் தூரிக்கொண்டே இருக்கிறது
அந்த அழகிய நிமிடங்கள்
நிற்காத அடைமழையென என் உள்ளமெங்கும் .!
ரவுகள் விடிந்துபோகலாம்
நிமிடங்கள் கடந்துபோகலாம் 
இருப்பிடம் மாறிப்போகலாம்
ஆனால் நான் மட்டும் மீண்டும்
ஒரு மழைக்காக காத்திருக்கிறேன்
அதே ஏக்கங்களுடன் வானம் பார்த்த பூமியாய் !!!!

19 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : சின்ன சின்ன மழைத்துளி : chinna chinna mazhai thuli (Panithuli sangar tamil kavithaigal ) :