கவிதை எழுதும் ஞாபகங்கள் : Panithuli Shankar Kavithai Eluthum Gnabagangal 25+04+2011

 மறந்து போனதாய்
நினைக்கும் ஞாபகங்கள்
எல்லாம்
மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
இந்த பேனாவின் இதழ்கொண்டு...

மை தீரும் பொழுதெல்லாம்
 உள்ளம் துடிக்கிறது
அதில் உதிரம் ஊற்றி நிரப்ப...

தீர்ந்து போகாத
உன் நினைவுகள் ஊற்றி
நிரப்பிவிட்டேன்

இதோ மெல்லக்
கசியத் தொடங்கிவிட்டது
நம் நேற்றைய ஞாபகங்கள்
இந்த வெற்றுக் காகிதங்களில்
கவிதையென......!!


26 மறுமொழிகள் to கவிதை எழுதும் ஞாபகங்கள் : Panithuli Shankar Kavithai Eluthum Gnabagangal 25+04+2011 :