பனித்துளி சங்கர் கவிதைகள் : காதல் பிம்பங்கள் (02+05+2011)

ரவின் திரை எங்கும்
கருப்பு பிம்பங்களின் கால் தடங்கள்
தேகம் மட்டுமே நிலையாய் இருக்கிறது...
ஞாபகங்கள் எல்லாம் எங்கோ சிதறிக்கிடக்கிறது..!
கபனித்துளி சங்கர் கவிதைகள்
ன்னத்தில் கை வைத்து .
உந்தன் ஞாபகங்களின்
விரல் பிடித்த
அந்த பொடி நடை
இந்த உலகம் மறக்க செய்தது .

ப்போதேனும் எட்டிப் பார்க்கும்
எதார்த்த  உரையாடல்களில் எல்லாம்
 அனுமதியின்றியே ஒட்டிக்கொள்கிறது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் .

தழ்கள் சிரிப்பது
மட்டும்தான் சந்தோசமா
முதல் முறை
மொத்த தேகமும் உந்தன்
ஒற்றைப் பார்வையில்
வெட்கம் கண்டதை
எப்படி சொல்வேன் !?

ல இரவுகள் உறங்கிப் போகாத
எனது இமைகளிடம் கேட்டுப்பார்
கனவிலும் உனது வருகைக்காக
காத்திருந்து ஏமாந்ததை
சொல்லி அழும் !

உனது முகம் பார்க்க காத்திருந்து
 விரல் நகம் கடித்தேவா
 கழிந்து போவது பொழுதுகள் !?

ருவம்  இல்லாத
 உணர்வுகளின் தேடலாய்
விழி போகும் தூரம் எங்கும் நீள்கிறது
உன்னைப் பற்றியக் கற்பனைகள் ..

ண்கள் பரிமாறி, காதல் அரங்கேற்றி
இதயம் தொலைத்ததில் என்னுள்
சுமக்க முடியாத சுமையாகிபோனது
இந்த மவுனம் தாங்கிய
தனிமை மட்டுமே...!!


27 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் : காதல் பிம்பங்கள் (02+05+2011) :