இன்று ஒரு அரியத் தகவல் ; தோல்விகள் தரும் வெற்றிகள் - பனித்துளி சங்கர்-Indru oru thagaval 21 May 2011


னைவருக்கும் வணக்கம் தோல்வி என்பது ஒவ்வொரு உயிருக்கும் மகிழ்ச்சியை தருகிறதா!? அல்லது துன்பத்தை  தருகிறதா!? .என்று நம்மிடம் யாராவது ஒருவர் கேட்க்க நேர்ந்தால் நம்மில் பலர் அந்த மனிதரை மனநிலைப் பாதிக்கப் பட்ட ஒருவர் என்றுக் எளிதாக என்னிவிடுவோம் . சரி உண்மையாகவே இந்த தோல்வி ஒவ்வொரு  உயிருக்கும் துன்பத்தை தருகிறதா அல்லது மகிழ்ச்சியைத் தருகிறதா என்றுக் கேட்டால் எனது பதில் மகிழ்ச்சி என்றுதான் சொல்வேன். பலருக்கு குழப்பமாக இருக்கலாம் .முதல் முயற்ச்சியில் ஏற்படும் வெற்றி நமக்கு ஒருவிதமானப் போதையை ஏற்ப்படுத்தி செல்கிறது ஆனால் முதலில்  ஏற்படும் தோல்வி நமக்கு ஒரு புது முயற்ச்சியை பற்ற வைத்து செல்கிறது .நாம் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையை அந்தத்  தோல்வி நமக்கு கற்றுத் தருகிறது என்பதுதான் உண்மை .வெற்றிப் பெற்றவர்களிடம் கேட்டால் அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள் ஆனால் தோல்வியடைந்த ஒருவனிடம் கேட்டால் ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கும் 

 தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம். .  


னிதன் நிலவுக்கு சென்றதே மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் .கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- சரியாக சொல்லவேண்டும் என்றால் தோல்வி ஒன்றுதான் இந்த உலகத்தில் பல வரலாற்று நாயகர்களை உருவாக்கி இருக்கிறது என்றால் நம்புவீர்கலாம் . ஆம்  எத்தனை பேருக்கு தோல்விகளால் சாதனை படைத்த இவர்களைப்  பற்றி தெரியும் என்று தெரியவில்லை . தெரிந்துகொள்ளுங்கள்
ணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை தோல்வி ஒன்றுதான் எனக்குக் கற்றுத்ததந்து என்றார்ந்த மனிதனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது . ஆனால் இவர் கண்ட தோல்விகளின் நீளத்தை இதுவரை யாரும் எட்டவில்லை என்று சொல்லலாம் .
வியாபாரத்தை 21 வயதில் தொடங்கினார் - தோல்வி.
மாகாண சட்ட சபைக்கு போட்டியிட்டார் - தோல்வி.
நரம்புத் தளர்ச்சி அவனுள் நாட்டியம் நடத்தியது - உடலளவான தோல்வி.
மறுபடியும் தேர்தலில் குதித்தார் - தோல்வி.
முதன் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் - தோல்வி.
பிறகு மக்கள் மன்றத் தேர்தலில் போட்டியிட்டார் – தோல்வி.
52வது வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் - வெற்றி அவரை முத்தமிட்டது.30 வருட காலங்கள் தன் வாழ்நாளில் தோல்வி ஒன்றையே சந்தித்த மாமனிதன் இறுதியாக தன் புகழ் உலகமெங்கும் பரவும் வண்ணம் வெற்றியை சந்தித்தார். அந்த மாமனிதர் தான் அப்ரஹாம் லிங்கன்.

நாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.
 வ்வொரு தோல்வியிலும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடையுங்கள். அந்த மகிழ்ச்சியே உன்னை வெற்றிக்கு இழுத்துச்செல்ல உதவும் மிகப்பெரும் சக்தியாகமாறிவிடும்!!!

தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் ,தோல்வியைக் கொண்டாடுங்கள் . வாழ்க்கை என்பதன் மறுபக்கமே தோல்வி என்பதுதான்.இதை நாம் புரிந்துகொள்ளாத வரை அது நமக்கு துன்பமாகிறது . புரிந்துகொண்டால் அதுவே நமக்கு இன்பமாகிறது . எப்பொழுதும் முயற்சிகளுக்கு முறுக்கேற்றி வைய்யுங்கள்.நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள் .

டிஸ்கி : நான் எழுதிய முதல் கவிதை '' தோல்வியைக் காதலிக்கக் கற்றுக்கொள் இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு''

20 மறுமொழிகள் to இன்று ஒரு அரியத் தகவல் ; தோல்விகள் தரும் வெற்றிகள் - பனித்துளி சங்கர்-Indru oru thagaval 21 May 2011 :