காதல் யுகம் - Kadhal Yugam Kavithai -பனித்துளிசங்கர் காதல் கவிதைகள் 17 May 2011


 யார் விதைத்தது தெரியவில்லை ஆனால்
திரும்பும் திசை எங்கும்
பூத்துக் கிடக்கிறது இந்தக் காதல் !.

பசி எடுத்தும்
உன்னப்படாத உணவு
தாகம் எடுத்தும்
 குடித்து முடிக்காத தண்ணீர் 
பார்பவர்களின் கண்களுக்கு
பைத்தியம் என்று கூட எண்ணத் தோன்றும் .


கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள்

து மட்டுமா ஆடை உடுத்துகையில்
பொத்தான் இல்லாத இடத்தில் எல்லாம்
என்னதான் செய்கிறதோ விரல்கள் .
அவளை எண்ணிக்கொண்டே
பின் தொடர்ந்த நினைவுகள் திரும்புகையில்தான்
அறியப்படுகிறது எனக்காக
நான் இல்லாத நிஜங்கள் !.

ள் கடல் தொலைத்த இதயமாய்
திரும்பும் திசை எங்கும்
அலைமோதுகிறது ஒரு எதிர்பார்ப்பு .

த்தனை முறைதான் என்னில்
பறித்து செல்வாய் இன்றாவது
சரியாக கொடுத்துவிடு
சொல்லாமல் சொல்கிறது அவளுக்காய்
மீண்டும் பறித்த ரோஜா ஒன்று !

வளைப் பற்றி எண்ணிக்கொண்டே
பின்னிரவில் உறங்கி
முன்னிரவில் எழுத்து
தினம் அவளுக்கான முற்றுசந்தின்
காத்திருப்பில் உணரும் மகிழ்ச்சியை
சொல்லி தீர்க்க இந்த கவிதை போதாது
இன்னும் சில யுகங்கள் வேண்டும் !!..

                                            ❤   பனித்துளி சங்கர் ❤ 


35 மறுமொழிகள் to காதல் யுகம் - Kadhal Yugam Kavithai -பனித்துளிசங்கர் காதல் கவிதைகள் 17 May 2011 :