முதல்வர் பதவி ஏற்பு செல்வி ஜெயலலிதா; அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு :பனித்துளி சங்கர் May 14 2011

  அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 10 மணி அளவில் அல்லாம் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம் . இதுவரை வரலாற்றில் ஏற்படாத மாற்றத்தை இந்த தேர்தலில் தமிழக மக்கள் ஏற்படுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கொடுத்திருக்கிறார்கள் .
திமுக தலைமையிலான கூட்டணி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பொதுச்செயலர் செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராகப் நாளை பதவியேற்கிறார்.

அ.தி.மு.க. 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைக்கிறது. தேமுதிக போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 118 இடங்களே தேவை என்ற நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

துநாள் வரை தமிழகத்தை ஆட்சி செய்ய இரண்டு பெரும்  கட்சிகளால் மட்டுமே முடியும் என்பதை பொய்யாக்கி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது திமுக . திமுகவை பின்னுக்குத் தள்ளி தற்போது எதிர்க்கட்சி தலைவர்  என்ற பதவியை ஏற்கும் நிலையில் நடிகர் விஜயகாந்த் முன்னிலை ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

ட்சி அமைப்பது, அமைச்சர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தி.மு.க.,வை காட்டிலும், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச் சரவை விசாலமாக இருக்கும். 35 பேர் வரை அமைச்சர் பட்டியலில் இடம் பெறக்கூடும். மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மாவட்ட செயலர்களில், சீனியர், எந்தவித புகாருக்கும் இடம் தராமல், கட்சி தாவாமல், ஒதுக்கிய தொகுதிகளில் வெற்றிகளை தேடித்தந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவும் செல்வி ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

துவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையின் தொகுதிகள் வாரியாக யார் யார் எங்கு எவளவு ஓட்டுக்கள் பெற்று  வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பட்டியலை வாருங்கள் அறிந்துகொள்ளலாம் .பட்டியலுக்கு நன்றி தினமணி .

13 மறுமொழிகள் to முதல்வர் பதவி ஏற்பு செல்வி ஜெயலலிதா; அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு :பனித்துளி சங்கர் May 14 2011 :