தரை தொடும் வானம் - பனித்துளிசங்கர் இயற்கை கவிதைகள் -Nature kavithaigal 30 May 2011


காற்று வெளியில்
திறந்து வைத்தப் புத்தகத்தின்
வாசித்து முடிக்காத பக்கங்களாய்
படபடத்துக் கொள்கிறது
கற்பனைகளும் ,கனவுகளும் !

ட்டித் தொட்டுவிடும் வானமாய்
பார்க்கும் திசை எங்கும்
சரிந்துகிடக்கிறது மேகங்கள் .

ள்ளம் எழுத நினைத்தும்
எழுத்தாணி இல்லாத விரல்களாய்
ஒரு நீண்டதவிப்புடன்
இதயத்தில் சேமிக்க முயற்ச்சிக்கிறேன்
சற்றுமுன் ரசித்த
அந்த இயற்கைக் காட்சிக்கான
கவிதையை !              

                                                                 ❤ பனித்துளி சங்கர் ❤

  
 
                                                                                     

12 மறுமொழிகள் to தரை தொடும் வானம் - பனித்துளிசங்கர் இயற்கை கவிதைகள் -Nature kavithaigal 30 May 2011 :