காதல் கனவுகள் : பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் -Tamil Love Poem 11 May 2011

தயம் களவு போனதால்
இந்த உலகம் மறந்துபோனது.
ஒற்றைப் பார்வையில்
பற்றி எரிகிறது தேகம்..!
ற்றை நிலவு
ஓராயிரம் விண்மீன்கள்
எல்லாம் கொட்டிக் கிடக்கிறது
நினைவுகள் எங்கும்..!
விரல் தொட்ட
ஒற்றை வண்ணத்துப் பூச்சி
உன்னால் உலகமாகிப்போனது..!

ரு குவளையில்
ஊற்றி வைத்த மகிழ்ச்சியாய்
இதயமெங்கும் நிரம்பி வழிகிறது
ஒரு வெட்கம்..!

த்தனை நாட்களாய்
என்னுடன் உறங்கிய தலையணை
இப்பொழுதெல்லாம்
உன் தேகமாய்....!

தேதோ பேசிக்கொண்டு
கண்ணாடி முன் நின்று சரி செய்யும்
ஆடை எல்லாம்
வெட்கப் படுகிறது ...!

தெருவில் கடந்து செல்லும்
உடல்களில் எல்லாம்
உனது பிம்பங்கள்..
உற்றுப்பார்த்து
ரசிக்க நினைக்கையில்
களைந்து போகிறது
காட்சி பிழைகள்...!

காதலிப்பதாக சொல்லி இருப்பேன்
ஒருவேளை உன்னைக் கண்ட
அந்தக் கனவு இன்னும்
சிறிது நேரம் நீண்டிருந்தால்...!


                                              - ❤ பனித்துளி சங்கர் ❤


19 மறுமொழிகள் to காதல் கனவுகள் : பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் -Tamil Love Poem 11 May 2011 :