தொடரும் ஞாபகம் (Thodarum Gnapakam ) - பனித்துளிசங்கர் கவிதைகள் 23 May 2011


துநாள் வரை என்னைப் பற்றி மட்டுமே
கிறுக்கிய பேனா இனி வரும் நாளெல்லாம்
நம்மப் பற்றியே கிறுக்கும்
வ்வொரு நாட்களையும்,
ஒவ்வொரு நிமிடங்களையும்
புதிதாய் எனக்கு அறிமுகம் செய்தது
உந்தன் காதல்தான்....

ற்பனைகள் கற்றுத் தராதக் கனவுகளை
எல்லாம் நீ என்னைக் கடந்து
செல்கையில் மட்டுமே உணர்ந்துகொள்கிறேன்....

ரு நடைபழகும் குழந்தையாய்
துணைக்கு எப்பொழுதும்
உன் விரல் பிடித்து நடக்க ஆசை.....

ரு காகிதத்திற்குள் மறைத்துவைத்த 
மிட்டாய் ஒன்றை ஆவேசமாய்
பிரித்துப் பார்க்கும் குழந்தை ஒன்றின்
எதிர்பார்ப்புகளுடன் ஒன்றிப்போகிறது
உனக்கான என் காத்திருப்புகள்.....

சின்னஞ் சிறு வயதில்
கருப்பு வண்ணம் பூசிய
சிலேடுகளில் எல்லாம் முதல் வார்த்தை
அம்மா என்றுக் கிறுக்கி ரசித்த ஞாபகங்கள்
இப்பொழுதும் நீள்கிறது
உனது பெயரை எழுதும்பொழுது........

ன்னைப் பற்றிய இந்த நினைவுகள்
நீண்டுபோகட்டும்....
நம்மைப் பற்றிய கனவுகள்
அதில் தினம் தினம் புதிதாய் மலரட்டும் .
தென்றலின் சுவாசம் குடித்து
இந்த தேகம் மட்டும்தான் வளர்க்கிறது...
ஆனால் உந்தன் நேசம் குடித்து மட்டும்தான்
நான் இப்பொழுதும் உயிர் வாழ்கிறேன்.....
நரைத்துப் போயினும் உன்னை ரசித்திருப்பேன்
இந்த உயிர் மறைந்து போயினும்
உன் நினைவுகள் சுமந்திருப்பேன்...!!
                 
                                                                ❤ பனித்துளி சங்கர் ❤

18 மறுமொழிகள் to தொடரும் ஞாபகம் (Thodarum Gnapakam ) - பனித்துளிசங்கர் கவிதைகள் 23 May 2011 :