வியக்க வைக்கும் தகவல்கள் : ஓவியங்களால் வரலாற்றை மாற்றிய Vincent வான்கா PART 1

னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று நாம் பார்க்க இருக்கும் தகவல் ஓவியம் பற்றியது. நம்மில் பலர் சொல்லிக் கொள்வதுண்டு எனக்கு ஓவியம் நன்றாக வரையத் தெரியும். எதைப் பார்த்தாலும் அப்படியே வரைந்துவிடுவேன் என்று. அது ஒவ்வொருவரும் தங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. ஆனால் ஓவியம் என்பதற்கு இதுவரை எந்த தனிப்பட்ட விதிமுறைகளும் விதிக்கப்படவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஒரு சமூகத்தின், பண்பாட்டின், கலாசாரத்தின் மேன்மையை உணர்த்தும் அரிய சாதனமான இந்தக் கலைதான் மிருகங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி, அவனை மேலும் பண்புள்ளவனாக மாற்றித் தருகிறது. இனம், மொழி, தேசம் கடந்து மனிதம் ஒன்று என்பதை நமக்கு உணர்த்தும் மகத்தான பொருளாகவும் விளங்கு கிறது.

சிலர் மனதில் தோன்றுவதை கற்பனையில் வரைவார்கள் அதையும் ஓவியம் என்று சொல்கிறோம். இன்னும் சிலர் உருவங்களே இல்லாத ஏதேனும் ஒன்றை வரைந்து அதற்கு ஏதேனும் ஒரு புதுமையான கதைகளை சொல்லி அனைவரையும் ரசிக்க வைக்கும் ஓவியர்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சில ஓவியர்கள் வரையும் சில கிறுக்கல்கள் கூட பல அர்த்தமுள்ள ஓவியங்களை வெளிப்படுத்தும் திறமை உள்ளவை. இப்படி ஒவ்வொரு ஓவியனுக்குள்ளும் வார்த்தைகள் எதுவும் இல்லாத பல புதுமைகளும் ரசனைகளும் ஓவியங்களாக துரிகைகளின் தீண்டலில் உயிர்ப் பெறுகின்றன. மூன்று மணிநேரம் நாம் பார்க்கும் சினிமா படங்கள் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை ஒரு சிறந்த ஓவியம் ஏற்படுத்துவிடும் என்பது ஓவியங்களின் வண்ணங்களுடன் தங்களின் எண்ணங்களை பொருத்தி ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் இது நன்கு தெரியும்.


லகத்தில் எப்பொழுதும் இளமை மாறாத பொக்கிஷம் ஓவியங்களும் புகைப்படங்களும்தான் என்று எங்கோ வாசித்த ஞாபகம். உலகத்தில் இதுவரை அதிகம் விற்கப்பட்ட அனைத்து துறை சார்ந்த பொருட்களிலும் முதல் பத்து இடங்களுக்குள் ஓவியமும் இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சரி..! நாம் இனி விசயத்திற்கு வருவோம்..!
வியம் என்றாலே நம் அனைவருக்கும் அதை வரைந்தவரின் பெயர் அறிந்து கொள்வதில்தான் ஆர்வம் அதிகம் இருக்கும். ஓர் ஓவியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதை வரைந்த கலைஞனின் வாழ்வைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு ஓவியங்களைப் பார்ப்பது, ரசப்பதே ஓர் சுகமான அனுபவமாக இருக்கும். அந்த வகையில் ஓவியர் வான்காவைப் பற்றி அறியாதவர்கள் ஒரு காலத்தில் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு தனது ஓவியத்தினால் பல லட்சம் ரசிகர்களின் இதயங்களிலும் வண்ணங்களை பூசி சென்றவர் என்று கூட சொல்லலாம்.
சில வியப்பான விஷயங்களை நாம் கேட்கும்போழுதோ அல்லது வாசிக்கும்போழுதோ நம்மில் பலர் பெருமூச்சு விடுவதுண்டு. ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றி வாசிக்கும் ஒவ்வொரு நொடிகளும் எனக்கு பெருமூச்சாகவே நீண்டது என்றால் நம்புவீர்களா...!? ஆம் நண்பர்களே..!

தயங்கள் சிறைபிடிக்கப் படுவதற்கும் சிறைப்பட்டுப் போவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இவர் கடந்த வாழ்க்கைதான் எனக்கு வேறுபடுத்திக் காட்டியது. அப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை பற்றி இன்றையத் தகவலில் பதிவு செய்வதில் ஆயிரம் மத்தாப்பூக்கள் ஒன்றாய் பற்றவைத்த வெளிச்சமாய் உள்ளம் எங்கும் ஒரு சந்தோசத்தில் குதிக்கிறது. அப்படிப்பட்ட மகோன்னதமான கலைஞர்களில் ஒருவன்... வின்சென்ட் வான்கா (Vincent van Gogh  ) !
லைகளில் சிறந்த ஓவியத்தை தன் வாழ்வின் ஆதார மூச்சாகக்கொண்டு அதற்காகவே வாழ்ந்து, 37 வயதுக்குள் தன் கதையைத் துப்பாக்கியால் முடித்துக்கொண்டவன் வான்கா! இவர் 19ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர். இவரின் சிறப்பை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இவர் முழுமையாக வரையாமல் அரைகுறையாக விட்டு சென்ற ஓவியங்கள் கூட இன்று கோடிக் கணக்கில் விலை போகிறது.தினந்தோறும் வாழ்வின் ஒவ்வொரு மூச்சையும் ஒவியத்திற்காக அர்ப்பணித்தவன் . ஆனால் இவர் வாழ்நாள் முழுவதும் வறுமையின் கொடுமையை அனுபவித்தே இறந்தவர் என்றால் நம்புவீர்களா..!?

வின்சென்ட் வான்கா (Vincent van Gogh  ) 1853 மார்ச் 30ம் தேதி ஹாலந்து நாட்டில் பிறந்தவர்தான் இந்த ஏழை ஓவிய சிகரம். இதே நாளில் பிறந்து இறந்துபோன இவரின் அண்ணனின் நினைவாகவே இவருக்கு இந்தப் பெயரை வைத்தனர் அவர் பெற்றோர்கள். ஆனால் இது வான்காவிற்குப் பிடிக்கவில்லை இவருக்கு இறந்த பெயர் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இவரின் தந்தை ஒரு மதபோதகர் அவரிடம் இருந்து ஓவியர் வான்காவிற்கு அதிக அறிவுரைகள்தான் கிடைத்ததே தவிர ஒரு வளமான வாழ்வுக் கிடைக்கவில்லை. வான்காவின் குடும்பம் முழுவதும் வறுமை மட்டுமே ஒட்டிக் கிடந்தது இவரின் ஓவியத்தின் வண்ணங்களைப் போல....


வியர் வான்கா சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தார். வேறு வழியின்றி அவரின் பெற்றோர்கள் வான்காவை வெளியூரில் ஓவியக் கூடம் வைத்து நடத்தி வரும் தனது உறவினரின் வீட்டிற்கு எடுபிடி வேலை செய்ய அனுப்பி வைத்தனர். அப்பொழுது வான்காவிற்கு பதினாறு வயது. அப்பொழுதுதான் தன் வாழ்நாளில் முதன் முதலாக ஓவியம் என்பதையே தனது கண்களினால் பார்த்து பிரமித்து போய் நின்றார். தனது வாழ்வின் பின்னாளில் என்னவாக ஆவது என்ற ஒரு தீர்க்கமான முடிவுகள் எதுவும் இன்றி அவரின் மனம் அலைமோதிக்கொண்டே இருந்தது.

தற்கிடையில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கினார். அந்தப் பெண்ணும் இவரை பிடிக்கவில்லை என்று சொல்லி உதாசீனப்படுத்தி சென்றுவிட்டால். மனம் மிகவும் நொந்துபோன வான்கா வேறு வழியின்றி விலை மாதர்கள் இருக்கும் இடத்திற்கு தஞ்சம் புகுந்தார். இறுதியாக விலைமாதர்களில் ஒரு பெண்ணையே திருமணமும் செய்துகொண்டார். அந்த பெண்ணோ வான்காவை மிகவும் கொடுமைப்படுத்தத் தொடங்கினார். வேறு வழியின்றி வான்காவின் அந்த திருமண பந்தமும் முறிந்துபோனது. இத்தனை பிரச்சினைகளை அவர் கடந்தபோது அவருக்கு அப்பொழுது 33 வயது. அப்பொழுதுதான் ஒரு நாள் சோகத்தின் சுமை தாங்க முடியாமல் தீக்குளித்து இறந்துபோவதெனே முடிவெடுத்தார்.

றுமையின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த இந்த ஓவியர் வான்கா (Vincent van Gogh  ) பின்பு எப்படி வரலாற்றை புரட்டிப்போடப்போகும் ஓவியங்களை வரைந்தார் என்ற மிகவும் சுவராஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ள தொடரும் பதிவில் பின் தொடருங்கள்.
 
                                தொடரும் இந்த ஓவிய சரித்திரம்

19 மறுமொழிகள் to வியக்க வைக்கும் தகவல்கள் : ஓவியங்களால் வரலாற்றை மாற்றிய Vincent வான்கா PART 1 :