ஒரு மனிதன் ஒரு மரம் - பனித்துளி சங்கர் கவிதைகள் - One Man One Tree - Iyarkai kavithai 02 May 2011


இது ஒரு மரம் தின்ற மனிதனின் உணர்வுகளின் அழுகுரல் !  

ரு உலகம்
ஒரு மனிதன்
ஒரு விதை
ஒரு செடி
ஒரு மரம்
ஒரு காய்
ஒரு கனி
வளர்த்துக்கொண்டே இருந்தான் மரங்கள் .
வளந்துகொண்டே இருந்தான் மனிதன் .
ல வருடங்கள்
பல மாற்றங்கள்
பல விஞ்ஞான வளர்ச்சிகள்
மறந்து போனான் மரங்கள் .
இறந்து போனான் மனிதன் .
இவன் உடல் எரிக்க மீண்டும்
இவன் உடன் கட்டை ஏறியது மரமும் !....

                                    ❤ பனித்துளி சங்கர் ❤டிஸ்கி ; னிதன் இருக்கும் வரை மட்டும்தான் பயன் . ஆனால் மரங்கள் இறந்த பின்பும் பயன் . மரங்களை வளர்க்க இயலாவிட்டாலும் இயன்றவரை. மனிதனால் செய்யப்படும் மரங்களின் கொலைகளைத் தவிர்ப்போம் .

12 மறுமொழிகள் to ஒரு மனிதன் ஒரு மரம் - பனித்துளி சங்கர் கவிதைகள் - One Man One Tree - Iyarkai kavithai 02 May 2011 :