கண்ணீர் ஊற்றுகள் - பனித்துளிசங்கர் / Panithulishankar Tamil Kavithaigal 27 May 2011

றக்கங்கள் பறிக்கப்படும்
ஒவ்வொரு நடு நிசிகளிலும்
உள் வாங்கும் சுவாசத்துடன்
ஒட்டிக் கொ (ல் )ள்கிறது
 ஒரு மரணப் பயம் !

மீதம் இருக்கும் வாழ்க்கை
எதற்கென்றேப் புரியாத
 பூகம்பமாய் இதயம் தாண்டி
வெடிக்கப் பார்க்கிறது !

மை மூமூடித் திறப்பதற்குள்
மீண்டும் ஒரு உறவின்
உயிர் பிரியும் சத்தம்
என் செவிகளை
துளைத்துக் கொண்டிருக்கிறது .!
 
சொல்லி அழ இயலாத மரணங்கள்.,
விம்மி விம்மி வெளிவரும்
கண்ணீர்த் துளிகள் .,
விரும்பி ஏற்காத உடல் சுகம் .,
தூண்டிலில் மாட்டிய மீனாய்
துன்புறுத்தலின் உச்சத்தில்
மீண்டும் மீள்கிறது
கற்பையும் , உறவையும்
ஒன்றாய்  இழந்த கணங்கள் !....

                              -பனித்துளிசங்கர்

15 மறுமொழிகள் to கண்ணீர் ஊற்றுகள் - பனித்துளிசங்கர் / Panithulishankar Tamil Kavithaigal 27 May 2011 :