காதல் கவிதைகள் - சற்று முன் ஒரு காதல் - Panithulishankar Tamil Love poem 09 May 2011


சாலையோர மரமாய்
சலசலப்புடன் இங்கும் அங்கும்
 பார்த்த படி நான் !.
நான் இமைத்து முடிப்பதற்குள் பிரம்மன்
 படைத்து அனுப்பினானோ இவளை !? 
சற்றுமுன் பார்த்த முகம்
 யார் என்று தெரியவில்லை
வெகு நேரமாக திரும்பாமல் சென்றவள்
மறைந்துபோகுமுன் ஏனோ
திரும்பிப் பார்த்து சிறு
 புன்னகை வீசி சென்றாள்.,
 குழப்பத்தில் குதிக்கிறது மனசு .
காதல் ஒரு முறைதான் பூக்கும்
என்று யார் சொன்னது   !???


                               ❤ பனித்துளி சங்கர் ❤

14 மறுமொழிகள் to காதல் கவிதைகள் - சற்று முன் ஒரு காதல் - Panithulishankar Tamil Love poem 09 May 2011 :