தெரியுமா உங்களுக்கு சூடான அரியத் தகவல்கள் ஆயிரம் - பனித்துளிசங்கர் Radio Hallo 89.5 FM ( UAE )
னைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . சரி நண்பர்களே இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம் . முதலில் அமீரகத்தில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் சில புதுமையானத் தகவல்களை பற்றி நாம் அறிந்துகொள்ளலாம் .

எப்பொழுதும் இல்லாத வகையில் முதன் முறையாக இப்பொழுது அமீரகத்தில் 24 மணி நேர தமிழ் வானொலி சேவையை ரேடியோ ஹல்லோ FM  ( Radio Hallo 89.5 FM ( UAE )  ) என்ற குழுவினர் தொடங்கி இருக்கிறார்கள் .

மீரகத்தில் என்னதான் வெயிலின் கொடுமை அதிகம் இருந்தாலும் இந்த Radio Hallo 89.5 FM  DUBAI வானொலி அதுதாங்க ரேடியோ  வருகையினால் இப்பொழுது ஒவ்வொருவரின் களைப்பிலும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கொளுத்தும் வெயிலிலும் அமீரகத்தில் ஒரு அடைமழை இந்த Radio Hallo 89.5 FM ( UAE ) வானொலி என்பது உண்மை ,. இதுவரை அறியாதவர்கள் இப்பொழுதேக் கேட்டு மகிழுங்கள்
.

 @@@@@@@@@@@@


                                             
லக நாடுகளில் இதுவரை எந்த நாடும் எட்டாத சாதனையை இப்பொழுது அமீரகத்தில் இருக்கும் எமிரட்ஸ் விமான சேவை ( Emirates airlines ) குறுக்கிக் காலத்தில் எட்டி இருக்கிறது .
 ஆம் நண்பர்களே உலகத்தில் தலை சிறந்த விமான சேவையில் மூன்றாவது இடத்தை இப்பொழுது இவர்கள் ( Emirates airlines )  எட்டி இருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாது இதுவரை இந்த ( Emirates airlines ) விமானத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 1.9 மில்லியன் பயணிகள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .@@@@@@@@@@@@ரி அமீரகத்தில் ( UAE )  வேலை செய்வதால் அமீரகத்தைப் பற்றி மட்டுமே தகவல்கள் சொன்னால் எப்படி என்ற உங்களின் கேள்வி எனக்கு நன்றாகக் கேட்கிறது . சரி வாருங்கள் எல்லோரும் கடலுக்குப் போகலாம் . ஆஹா அந்தக் கடல் இல்லைங்க யாரும் பயப்படவேண்டும் . கடல் பற்றிய ஒரு தகவளுக்குப் போகலாம் என்று அழைத்தேன் . ஆமாங்க பொதுவா நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் கடல் என்றாலே ஒரு அதிசயம்தான் . பின்ன இருக்காத உலகத்தில் மூன்று பங்கு அவங்க ஆட்சி தானே . அதிலும் இந்த அன்டார்ட்டிகா கடல் இருக்கிறதே இது ரொம்ப பயங்கரமானக் கடலுங்க !
அப்படி என்ன பயங்கரம் என்று தானே கேட்க வருரிங்க !?. சரி சொல்கிறேன் . நாம் வசிக்கும் இடங்களில் அதுதாங்க வீட்டில் ஒரு பத்து நிமிடம் மின்சாரம் இல்லாம இருட்டா இருந்தாவே பாதிபேருக்கு பேதியாகிவிடுகிறது . ஆனால் இந்த அண்டார்டிகா கடலில் நான்கு மாதங்கள் முழுவதும் ஒரே இருட்டாகத்தான் இருக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . அதுமட்டும் இல்லை இந்த அண்டார்டிகா பகுதியில் படிந்துள்ள பனிக்கட்டிகள் மொத்தமும் உருகத் தொடங்கினால் .உலகில் 60 ஆண்டுகள்  பெய்யும் மழைக்கு சமம் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . என்ன மக்களே அந்த பக்கமா இனி போறவுங்க எல்லாம் பார்த்து சூதானமாக இருங்க !


@@@@@@@@@@@@ட என்ன இது !? இந்தியாவில் பிறந்துவிட்டு அமீரகம் ( UAE ) , கடல் என்று தகவல் சொல்றேனே என்று உங்க உள்ளத்தில் ஒரு மூலையில சிறு கேள்வி தோன்றும் . அதனால எதுக்கு வம்பு இந்தியாப் பற்றிய ஒரு தகவலும் சொல்லிவிட்டா போகுது . சரி வாங்க இந்தியாவுக்கு போகலாம் .பொதுவாக நாம் எதை படித்தாலும் சரி எழுதினாலும் சரி அதில் ஏதாவது ஒரு பின் குறிப்போ அல்லது டிஸ்கியோ இப்படி ஏதாவது ஒன்றை சொல்லுவது வழக்கம் . அது மாதிரி ஒரு காலத்தில் மட்டும் இல்லைங்க இப்பக கூட இந்த ''பின்'' என்ற தொடங்கும் வார்த்தைகளுக்கு சற்று ஆதரவு அதிகம்தாங்க . என்ன குழப்புகிறேனோ !?

ரி நேராக மேட்டருக்குள் போகலாம் அட நம்ம இந்தியாவில் பயன்படுத்தப் படும் பின் கோடுகள் பற்றிதாங்க இந்த தகவல் அப்படி பின் கோடுகளில் என்னதான்  இருக்கிறது என்று கேட்டுவிடாதிங்க . ஒரு பெரிய மேட்டர் பின் கோட்டிற்குள்ள ( Pin Code ) இருக்கு . ஆம் நண்பர்களே மொத்த இந்தியாவிலேயே பின் கோட்டில் ( Pin Code ) அதிக எங்களை கொண்ட ஒரு நகரம் நம்ம சென்னைதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . அனைத்து நகரங்களின் பின்கொடுகளையும் தருவதற்கு இப்பொழுது நேரமின்மை அதனால் ஒருசில பிரபலமான நகரங்களின் பின் கொடுகளைமட்டும் தருகிறேன் மற்றதை நீங்களே தேடிப் பார்த்துகொள்ளுங்கள் .

சென்னை ( 600001 --- 600098 )
பம்பாய் ( 400001 --- 400093 ) .
கல்கத்தா ( 700001 --- 700070 ) .
டெல்லி ( 110001 --- 110062 ) .

ப்பவே பல பேர் எண்ணத் தொடங்கி இருப்பிங்களே !? சரி நண்பர்களே அப்படியே எண்ணிக்கொண்டே இருங்கள் . நாளை ஒரு கவிதையுடன் உங்களை சந்திக்கிறேன்.

நேசத்துடன் உங்களின்
❤ பனித்துளி சங்கர் ❤

14 மறுமொழிகள் to தெரியுமா உங்களுக்கு சூடான அரியத் தகவல்கள் ஆயிரம் - பனித்துளிசங்கர் Radio Hallo 89.5 FM ( UAE ) :