கசியும் உணர்வுகள் - பனித்துளி சங்கர் காட்சிக் கவிதைகள் - Thanimai kavithaigal 07 May 2011


ந்த உலகம் மறந்துபோன
மனிதர்களிடம் இல்லாத சிறப்புகள்
இப்பொழுதும் குவிந்து கிடக்கிறது
எப்போதேனும் பார்வை எட்டும் காட்சிகளில் !
ங்கு சுவாசிக்கத் தெரிந்தவன் மனிதனா !?
இல்லை சிந்திக்கத் தெரிந்தவன் மனிதனா !?
என்ற குழப்பங்கள் சிலநேரம்
குரல்வளை நெருக்கத் தொடங்கிவிடுகிறது .

ருவங்கள் மாறிப் போயினும்
உணர்வுகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது
ஒரு  தாய்மையின் முகவரியை !

ணவற்று வற்றியதேகம் என்றபோதிலும்
உயிர் உள்ளவரை தன் குழந்தைகளின்
 பசியாற்றி இறக்கத் துடிக்கும்
வார்தைகளில்லாத நன்றியுள்ள ஜீவனாய்
நீயாகிப்போனா (நா) ய் !

               
                               -❤ பனித்துளி சங்கர் ❤18 மறுமொழிகள் to கசியும் உணர்வுகள் - பனித்துளி சங்கர் காட்சிக் கவிதைகள் - Thanimai kavithaigal 07 May 2011 :