வாயினால் ஒரு லட்சம் ஓவியங்கள் - இன்று ஒரு தகவல் - Indru oru thagaval - Doug Landis Mouth Art

னைத்து உறவுகளுக்கு வணக்கம். பொதுவாக நாம் ஒவ்வொருவரும் தினமும் எத்தனை எத்தனையோ காட்சிகளை கண்டு கொண்டிருக்கிறோம். அத்தனை காட்சிகளும் நமது உள்ளத்தில் எபோழுதும் அழியாமல் பதிவதில்லை. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் உலக அதிசயங்களான தாஜ்மஹால் போன்றவற்றின் காட்சிகள் ஒரு போதும் நமது இதயத்தில் இருந்து மறைந்துபோவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதுபோல்தான் இந்த ஓவியங்களும்.

லர் கூடி நிற்கும் ஒரு இடத்திற்கு சென்று உங்கள் அனைவருக்கும் பிடித்த ஓவியம் எது என்றுக் கேட்டால் அங்கு நூற்றில் தொண்ணூறு சதவீதம் மோனாலிசா ஓவியம் என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு அனைவரையும் ஈர்க்கும் அளவிற்கு அந்த ஓவியம் வரையப்பட்டு இருந்தது. சரி இதெல்லாம் இந்த பதிவிற்கு எதற்கு என்று உங்களில் பலர் யோசிக்கத் தொடங்குமுன் நேராக மேட்டருக்கு வருகிறேன்.

வியம் வரைவது என்பது தெரிந்தவர்களுக்கு பூக்கள் பறிப்பதுபோல தெரியாதவர்களுக்கு கத்தி மேல் நடப்பதுபோல இது உண்மையும் கூட என்று சொல்லலாம். இன்னும் பல கேள்விகள் நிறைய பேருக்கு எழும். பலரின் கிறுக்கல்கள் கூட மிகவும் புகழ் பெற்ற ஓவியங்களாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். வான்கோ என்ற ஓவியரின் கிறுக்கல்கள் இப்பொழுதும் பல கோடிகளுக்கு விலை போகும் சிறப்புகள் பெற்றவை.

வான்கோ என்று இங்கு குறிப்பிடும் பொழுதுதான் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓவியத்தால் உலகை மிரட்டிய வான்கோ என்ற ஒரு பதிவில் வான்கோ பற்றி எழுதத் தொடங்கியவன் அதை முதல் பகுதியுடன் நிறுத்தி வைத்திருக்கிறேன். உங்களில் யாருக்கேனும் இந்த வான்கோ பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் இருப்பின் அந்தப் பதிவை வாசித்துப் பார்க்கவும். இனி நாம் இந்த பதிவிற்கானத் தகவலுக்கு வருவோம்.

வியம் என்ற வார்த்தை உச்சரிப்பதற்கு எவளவு எளிமையோ அதற்கு எதிர்மறையாக இருக்கிறது ஓவியம் வரைவது. இது ஒரு சிறந்தக் கலை . சிறு வயதில் வண்ண வண்ண பென்சில்களைக் கைகளில் கொடுத்து நாம் கிறுக்குவதை எல்லாம் பார்த்து ரசித்த பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த ஓவியத்தை நம்மில் எத்தனை பேர் விடாது முயற்சித்தோம் என்பது கேள்விக்குறியே..!!?? 

பொதுவாக உலகத்தில் வியப்பு புதுமை என்ற வார்த்தைகளுக்கு பலருக்கு விளக்கம் தெரியவில்லை. ஒருவர் செய்வதை மற்றொருவர் பின்பற்றுவதில் வியப்போ புதுமையோ எதுவும் இல்லை. ஒருவேளை இதற்கு மாறாக ஒருவரும் செய்யாத ஒன்றை யாரேனும் செய்ய நேர்ந்தால் அதில்தான் வியப்பும் புதுமையும் புதிதாய் பூக்கிறது. சரி அப்படி இந்த படைப்பிற்கும் இந்த புதுமை வியப்பிற்கு உள்ளத் தொடர்பு என்ன !?
வியம் வரைவதற்கு பொதுவாக நாம் எல்லோரும் கைகளைப் பயன்படுத்துவோம். இன்னும் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாற்றுதிறனாளிகள் போன்ற உறவுகள் கால்களினால் ஓவியம் வரைந்திருக்கிறார்கள். இரண்டு கைகளும் இல்லாத ஒரு மனிதனால் என்ன செய்ய இயலும் என்று பலரும் முகம் சுழிக்கும் இந்த சமுதாயத்தில் ஒரு ஓவியர் தனது இரண்டு கைகளும் இல்லாத நிலையில் தனது வாயின் உதவிகொண்டு இதுவரை ஒரு லட்ச்சதிற்கு அதிகமான ஓவியங்களை வரைந்து சாதித்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா !?

ண்மைதான் டஹ் லேண்டிஸ் (Doug Landis) என்பவர்தான் அந்த ஓவியர் தனது சிறு வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த இந்த ஓவியர் சாதிக்கவேண்டும் என்ற ஆசையில் விடாமுயற்சியினால் தனது வாயினால் ஓவியங்களை வரையத் தொடங்கினார் ஒரு சாதாரண முயற்சியாக தொடங்கிய இந்த பழக்கம் இன்று ஒரு அசுர வெற்றியை அவருக்கு தந்திருக்கிறது. அவர் வரைந்த ஓவியங்களிள் பலவற்றை இங்கு கீழேத் தந்திருக்கிறேன் பார்த்து மகிழுங்கள்.


* * * * * * *
டிஸ்கி: கைகள் இருக்கும் எல்லோரும் சாதிக்கவில்லை. கைகள் இல்லாத இவர் சரித்திரம் படைத்திருக்கிறார். உடலின் ஊனத்தில் இல்லை வளர்ச்சி. ஒவ்வொருவரின் உள்ள ஊனத்தில் மட்டுமே இருக்கிறது வளர்ச்சி. உடல் ஊனப்படினும் உள்ளம் ஊனப்படாமல் பார்த்துக் கொள்வோம். நம்பிக்கை இழக்கும் வரை ஒருபோதும் தோல்விகள் வருவதில்லை.
* * * * * * *

12 மறுமொழிகள் to வாயினால் ஒரு லட்சம் ஓவியங்கள் - இன்று ஒரு தகவல் - Indru oru thagaval - Doug Landis Mouth Art :