காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள்

னத்துப்போன
நினைவுகளின் உச்சமாய்
கடற்கரை எங்கும்
 காத்துக் கிடக்கிறேன் .

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது ஆனால்
உன் பார்வைகள் பதிந்த
நான் மட்டும்தான் இன்னும்
உனக்காகக் காத்துகிடக்கிறேன் ..!

னவுகளின் கரையோரம்
கடல் அலைகலேன ஓயாமல்
வந்து வந்து செல்கிறது
 உன் ஞாபகங்கள் ..!

டைந்து போவதற்கும்
உடைத்துப் பார்ப்பதற்கும்
விளையாட்டுப் பொருளென
மாறிப்போனதோ இந்த இதயம்....!?

ழ நினைத்தும்
கண்ணீர் இல்லாத விழிகள்..!
உளற நினைத்தும்
வார்த்தைகள் இல்லாத உதடுகள்..!
இறந்துபோக நினைத்தும் இன்னும்
உன்னை மறக்காத  இதயம்  என
 ஒவ்வொரு நொடியும்
போலியாய் கசிகிறது
உன் நினைவுகளில்....!!!
                        
                          - ❤ பனித்துளிசங்கர் ❤

19 மறுமொழிகள் to காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள் :