கெட் டு கெதர் - Tamil ஜோக்ஸ் / நகைச்சுவை சிரிப்புகள் 05 May 2011

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரே கெட் டு கெதர் மேட்டரா போனதுல சரியாக பதிவுகள் தர இயலவில்லை. சரி இந்த இரண்டு நாட்களில் இல்லாத மகிழ்ச்சியை உங்களுக்கு கொடுக்கத்தான் இந்தப் பதிவு.

ன்னதான் இண்டர்நெட், ஈ -மெயில் என்று உலகம் வேகமாக பறந்தாலும், இந்த குட்டி மனது ஏதேனும் ஒரு சில யதார்த்தங்களில்தான் அதிகம் சிறைபட்டுக் கிடக்கிறது. அதுபோலதான் இந்த சிரிப்புகளும்
தினமும் குறைந்தது மூன்று நிமிடங்களாவது சிரிக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. அதுக்கு எங்கே நேரம் இருக்கு என்று சலித்துக் கொள்ளும் சக்திமான்களுக்கு இந்த நகைச்சுவைப் பதிவு சமர்ப்பணம் .!
* * * * * * *
ன்று உலகில் காற்றைவிட வேகமாய் பயணிக்கும் காதலில் இருந்து தொடங்கலாம் சிரிப்பை.

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனென்றால் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!
* * * * * * * 
நபர் – 1: ஏண்டா..! நாளைக்கு ஒரு நாள் லீவு இருக்கே நான் எங்க சித்தி
வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்….. நீ எங்கே போகப் போறே..???
நபர் – 2: நான் ‘Zoo’வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா…
நபர் – 1: அது சரி… அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற இடத்துக்குதானே போக முடியும்!!!..
* * * * * * *
நபர் – 1: இ‌ங்க பா‌த்‌தீ‌ங்களா ஹெல்மெட், லைசன்ஸ், வண்டி
 இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் மற‌க்காம எடுத்துட்டு வ‌ந்து‌ட்டே‌ன்
நபர் – 2:அது ச‌ரி ஏ‌ன் நட‌ந்து வ‌ர்‌றீ‌ங்க.
நபர் – 1:  ஐய்யைய்யோ....! இன்னிக்கு வண்டிய எடுத்துட்டு வர மறந்துட்டேன் சா‌ர்.
* * * * * * *
சாமி... நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்...?"

அடப்பாவி... நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?"
நீங்கதானே சாமி சனியனை எல்லாம் பனியனைப்போலக் கழட்டித் தூக்கியெறியணும்னு சொன்னீங்க?"
* * * * * * *
ங்க வீட்டில் திருடன் திருடினதைப் பார்த்தும் நீ ஏன் சும்மா இருந்தே?"
அவன் கையில் கத்தி இருந்ததே...?"
உன்னிடம்தான் துப்பாக்கி இருந்ததே...?"
அதையும் பத்திரமா ஒளிச்சு வெக்கலைன்னா துப்பாக்கியையும் திருடியிருப்பான்!"
* * * * * * *
ரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்லஎன்கிறார். இதைத்தான் நாம் வெட்டி ஸீன்போடுவது என்கிறோம்….
* * * * * * *
 டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?
ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
* * * * * * *
Love marriage’கும்  Arranged marriage’கும் என்ன
வித்தியாசம்???
நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!
பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது Arranged marriage!!!
  * * * * * * *
 புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே... ஏன்...?"
அதுவா... அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்..."
  * * * * * * *
 ம்ம ஸ்டேஷனுக்கு மாமூல் கொடுக்கற கபாலியும், மாயாண்டியும் புது கண்டிஷன் போடறாங்க சார்!"
என்னன்னு?"
ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் வீரர்கள் மாதிரி அவங்களையும் ஏலத்துல எடுத்தாதான் மாமூல் தருவாங்களாம்!"
  * * * * * * *
  அ‌ப்பா : இதோ பாருடா! நீ சூப்பரா பரிட்சை எழுதினா... 80 மார்க்
சுமாரா எழுதினா 60 மார்க், ரொம்ப சுமாரா எழுதினா பாஸ் மார்க்...
மக‌ன் : அ‌ப்போ ரொம்ப மோசமா எழுதினா?
அ‌ப்பா: டாஸ்மாக்!
  * * * * * * *
    
நபர் – 1: நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதுக்கு “அந்த மாடு எங்க மேயுதோ?”ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில மரியாதை அவ்வளவுதானா???
நபர் – 2: ஓகோ… உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு… அது நீ தானா???
* * * * * * *
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???
உடனடியா பதில்
தேவை……!!!!
* * * * * * ** * * * * * *

11 மறுமொழிகள் to கெட் டு கெதர் - Tamil ஜோக்ஸ் / நகைச்சுவை சிரிப்புகள் 05 May 2011 :