எல்லாம் ஒரு விளம்பரம்தான் - நகைச்சுவைத் தகவல்கள் - Advertisement Technical

னைத்து உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். மீண்டும் உங்கள் அனைவரையும் இன்று ஒரு புதிய தகவலின் வாயிலாகவும், நான் எழுதும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. அனைவருக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் என்று சொல்லி முதலில் தொடங்குவது உண்டு. பல நண்பர்கள் கூட இதைப் பற்றி அதிகமாகக் கேட்டும் இருக்கிறார்கள். இதற்காக மிகப்பெரிய காரணம் ஒன்றும் சொல்ல இயலாவிட்டாலும் இப்பொழுது உள்ள நவீனத்துவத்தில் இது போன்று மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக எதற்காக கேட்கவேண்டும் என்று எண்ணலாம். நாளை என்பதன் மீது இருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையில் மட்டுமே இன்றையப் பொழுதை மிகவும் யதார்த்தமாகக் கடந்துக் கொண்டிருக்கிறோம்.

ரு வேலை நாளை என்பது மட்டுமே நமக்குள் இறுதியாகிப்போனால் இன்றையப்பொழுதும் நமக்கு நரகம்தான். அதனால்தான் தினமும் விடியும் ஒவ்வொரு நாட்களையும் ஒரு புதுமையுடன் ஏற்று உங்களை சந்திப்பதில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. இந்த வார்த்தைகளை நமது தாய் தந்தையுடனும் ஒப்பிடலாம். ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் உறவுகளின் அழைப்பிதல் ஒரு போதும் மாறப்போவதில்லை. சரி இந்த சுய புராணம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று நாம் தகவலுக்கு வருவோம். கடந்த குட்டித் தகவல் என்றப் பதிவில் விளம்பரங்கள் பற்றிய ஒரு சுவாராஸ்யமானத் தகவல் ஒன்றைத் தந்திருந்தேன். இந்தப் பதிவும் விளம்பரங்கள் பற்றியதுதான். 

ன்று விளம்பரங்கள் இல்லாத தொழிலோ அல்லது சினிமாவோ அல்லது அரசியலோ என இப்படி இன்னும் பல நூறு அல்லது பல்லாயிரம் என்று பலத் துறைகளைப் பற்றி சொல்லிகொண்டேப் போகலாம் அந்த அளவிற்கு விளம்பரங்கள் இல்லாமல் வளர்ச்சி அடைந்த எந்த தொழிலும் இல்லை என்று சொல்லலாம். பூகம்பமும், சுனாமியும் ஏற்படுவதை கூட இப்பொழுது விளம்பரமாக சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்கள் அந்த அளவிற்கு தினந்தோறும் வியாபார யுத்திகள் நிமிடத்திற்கு ஒரு மாற்றத்தைக் கண்டு கொண்டிருக்கிறது .

விளம்பரங்கள் என்று சொன்னவுடன் நான் மறக்க இயலாத ஒரு நிகழ்வு இப்பொழுது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. பொதுவாக இப்பொழுது வெளியிடப்படும் விளம்பரங்களின் கருத்து என்னவென்றே பலருக்கு புரிவதில்லை அந்த அளவிற்கு சம்மந்தமே இல்லாத பல புனைவுகளை விளம்பரங்களில் ஏற்படுத்தி மக்களை குழப்பிய வண்ணம் இருக்கிறார்கள். நானும் குழம்பிய ஒரு விளம்பரம் உண்டு. அந்தக் காலக்கட்டத்தில் கொசுக்களின் பிரச்சினை மிகவும் தலை தூக்கி இருந்தது. இப்ப மட்டுமென்ன தலைகுனிந்தா இருக்குனெல்லாம் கேட்கப்படாது. ஒகெ ஹி..ஹி..ஹி..) தினமும் ஒரு புதிய கொசு விரட்டிகளை அறிமுகம் செய்த காலம். நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ப்பொழுது ஆல் அவுட் என்ற பெயரில் ஒரு கொசுவர்த்தியின் விளம்பரம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது . இதற்கு முக்கியக் காரணம் அவர்களின் விளம்பரத் தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். இதை பற்றி அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் தெரியாதவர்களுக்கு இந்த ஆல் அவுட் கொசு விரட்டியின் விளம்பர சுருக்கம்.

ந்த கொசு விரட்டியை வாங்கி மின்சாரத்தில் பொருத்தியவுடன் இரவில் வரும் கொசுக்களை தவளை போன்ற ஒன்று திடீர் என்று தோன்றி எம்பி எம்பி கொசுக்களை பிடித்து கொல்வதுபோல விளம்பரம் செய்திருந்தார்கள். நானும் அந்த விளம்பரத்தைப் பார்த்த ஆர்வத்தில் மூன்று ஆல் அவுட் கொசு விரட்டிகளை வாங்கி சென்று வீட்டில் பொருத்திவிட்டு விடியும் வரை இன்னும் தவளை குதிக்கவில்லை குதிக்கவில்லை என்று காத்திருந்து ஏமாந்து போய் விடிந்ததும் கோபத்தில், அதனை வாங்கிய கடைக்காரரிடமே இதில் தவளை தாவவில்லை என்று சொல்லிக் காசு கேட்டு சண்டை போட்ட ஞாபகம் இன்றும் மறந்துபோகாத ஒன்று. 

ரி நண்பர்களே..! சொல்ல வந்த தகவல் மறந்து போனது சரி இனித் தகவலுக்கு வருவோம் . விளம்பரம் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருந்தாலும் நம்மில் பலருக்குத் தெரியாத பல புதிய விஷயங்கள் உண்டு. நம்மில் எத்தனை பேருக்கு விளம்பர உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட ஸ்லோகன் பற்றி தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ”தொட விரும்பும் சருமம்” ( The skin you love to touch ) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .

விளம்பரம் பற்றிய இன்றையத் தகவலும் உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் விரைவில் சந்திக்கிறேன்.

நேசத்துடன்
பனித்துளி சங்கர்.
* * * * * * *

14 மறுமொழிகள் to எல்லாம் ஒரு விளம்பரம்தான் - நகைச்சுவைத் தகவல்கள் - Advertisement Technical :