இன்று ஒரு தகவல் - பாகிஸ்தான் பெயருக்கான விளக்கம் - Explanation for the name of Pakistan - Panithuli shankar

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. உலகத்தில் உள்ள உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற பொருள்கள் வரை ஒவ்வொன்றிற்கும் இருக்கும் பெயர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். அதுபோல்தான் கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம்.

னால் உலகத்தில் ஒரு நாட்டிற்கு வைக்கப் பட்டிருக்கும் பெயருக்கானக் காரணங்கள் சற்று வித்தியாசமானது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இடத்தின் பெயரைக் கொண்டு ஒரு நாட்டின் பெயரை உருவாக்கி இருப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. சரி அப்படி வித்தியாசமான பெயர் கொண்ட அந்த நாடு எது என்றால் ஒருகாலத்தில் நம்முடன் ஒன்றாக மகிழ்ந்து குலாவிய பக்கத்து நாடான பாகிஸ்தான் - தான் அந்த வித்தியாச பெயர் கொண்ட நாடு.  
ம்மில் எத்தனை பேருக்கு பாகிஸ்தான் என்ற பெயருக்கான விளக்கம் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் இன்றுமுதல் அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்   இந்தப் பதிவு . சரி இனி நாம் பாகிஸ்தான் என்றால் என்னவென்றுப் பார்க்கலாம்.

P A K I S T A N & பாகிஸ்தான்

P  - என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள முதல் எழுத்து.
A - என்பது AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்
K - என்பது காஷ்மீர்
I  - என்பது  INDUS RIVER.
S-  என்பது SIND.
TAN என்பது -BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று எழுத்துக்கள் .
ன்ன நண்பர்களே..!! இன்று பாகிஸ்தான் என்ற பெயருக்கான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.

நேசத்துடன்
-பனித்துளி சங்கர்.
* * * * * * *

34 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - பாகிஸ்தான் பெயருக்கான விளக்கம் - Explanation for the name of Pakistan - Panithuli shankar :