இன்று ஒரு தகவல் - விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள் - Panithuli shankar in Amazing news

னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினால் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனிதர்களாகிய நாம் பின்தங்கி இருப்பதாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.

ண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றியே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திரங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய மனிதர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

  ஒரு காலத்தில் கடிகாரம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்த மனிதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேரத்தை அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமரில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும். புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரியனின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள்.இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.
ன்று கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக என்பதை மறந்து அதை ஒரு அழுகுப் பொருளாகவே மாற்றி அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டன. காலையில் உதிக்கும் சூரியனின் ஒவ்வொரு அசைவிலும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தங்களின் தினசரி வேலைகளை செய்துவந்த மனிதர்கள். இன்று ஆயிரம் அதிநவீன வசதிகள் இருந்தும் தங்களின் நேரங்களை சரியாக பயன்படுத்த மறந்து தடுமாறும் நிலையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் யாரும் மறுக்க இயலாத உண்மை. சரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம்.

ப்படித்தான் ஒரு முறை ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். பிற புரதான காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
ந்தக் காலத்தின் சூரியனின் தோற்றம் மற்றும் சூரியனின் மறைவை வைத்து மட்டும்தான் நேரத்தைக் கணித்தார்களா நமது முன்னோர்கள் என்று பார்த்தால் அதையும் கடந்து பலப் பறவை இனங்கள் எழுப்பும் ஒலிகளைப் பயன்படுத்தியும் நேரத்தை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். நமக்கு தெரிந்த நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தத்தை வைத்து விடியலின் நேரத்தைக் கணக்கிடுவார்கள் என்பதை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த சேவல் அல்லாது மற்ற எந்தப் பறவை மனிதனின் நேர கணக்கீட்டிற்கு உதவியது என்பதையும் பார்த்துவிடலாம்.
டிகாரம் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார்ந்திருந்தன. ஆகவே மேகமூட்டமான வானிலையில் அல்லது இரவில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவகாலம் மாறும்போது மீண்டும் அளவுத்திருத்தம் செய்யவேண்டியும் இருந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற்றிய, நீரினால் இயங்கும் ஒழுங்படுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையுடன் ஆரம்பகாலத்திலிருந்த கடிகாரமானது, கி.மு மூன்றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத்துக்குரியதாகும்.
பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியாளர்கள் கண்டுபிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சியால் இன்று கடிகாரத்தில் வளர்ச்சி பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே...!!
பின் வரும் பறவைகளின் சத்தங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரத்தை கணக்கிட மிகவும் உதவியாக இன்றும் பயன்படுகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < >   3 மணி.
செம்போத்து .சத்தமிடும் நேரம் < >  3-30 மணி

குயில் கூவும்  நேரம் < >    4-00 மணி.

சேவல் கூவும் நேரம் < >    4-30 மணி.

காகம் கரையும்  நேரம் < > 5-00 மணி.

மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < >  6-00 மணி.
ன்ன நண்பர்களே..! இனி கிராமப் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்டு இருக்கும் பறவைகளில் ஏதேனும் ஒன்றின் சத்தத்தை காலை நேரத்தில் நீங்கள் கேட்க நேர்ந்தால் நேரத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆயிரம் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் இதுபோன்ற யதார்த்தங்களுக்கு நிகர் இந்த யதார்த்தங்களே என்பது மட்டும் திண்ணம்.

ரி நண்பர்களே..! நேரம் இல்லாததால் நேரத்தை கணக்கிடும் ஆதிகால முறைப் பற்றி எழுதிவிட்டேன் பிடித்து இருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள். எனக்கும் கிரிக்கெட் விளையாட நேரம் ஆகிடுச்சு நாளை பார்க்கலாம்.  
* * * * * * *

நேசத்துடன் 
பனித்துளி சங்கர்.

32 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள் - Panithuli shankar in Amazing news :