சிரிப்பு விற்பவன் - Panithuli shankar tamil kadi jokes - நகைச்சுவை -ஜோக்ஸ்- கடி -காமெடி


னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு நகைச்சுவை பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. மனிதன் பிறர் சொல்லி செய்யாத செயல்களில் தினமும் அரை மணி நேரம் அவனின் சிரிப்பும் இருக்கவேண்டும் என்று ஒரு புதுமையான ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. இது வரை உலகத்தில் நிகழாத புதுமையாய் சிரிப்பதற்கென்றே ஒரு மருத்துவத் துறையை அமெரிக்காவில் துவங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள். 

ரு மனிதன் தினமும் சராசரி அரை மணி நேரம் சிரித்து மகிழ்வதால் அவனது உடலில் ஏற்படக்கூடிய எழுபது சதவீத நோய்களுக்கு இந்த அரை மணி நேர சிரிப்பே சிறந்த தடுப்பு மருந்தா மாறிவிடும் என்று அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எதோ ஒரு ஆய்வில் சொல்லக் கூடிய முடிவிற்காக இல்லை என்றாலும் நாம் தினமும் சில நிமிடங்கள் சிரிக்கும் நேரங்களில் நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதை நாமே உணரலாம். 

வ்வளவுதான் நாகரிகத்தின் உச்சத்திற்கும், சுத்தத்தின் உயரத்திற்கும் அறிவியல் வளர்ச்சி நம்மை அழைத்து சென்றாலும் உணர்வுகளின் உற்சாகத்திற்கு மகிழ்ச்சி என்ற ஒன்றைத் தவிர அதற்கு நிகரான மருந்தொன்று இந்த உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்று ஆராய்ச்சிகளின் ஆய்வுக் குழு கூறுகிறது. சரி நண்பர்களே..!! இந்த ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும் 
ன்னால் தினமும் நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாவிட்டாலும் வாரத்தில் ஒரு பதிவிலேனும் சில நகைச்சுவை துனுக்களுடன் உங்களுடன் பகிர்ந்து மகிழ்வதில் ஒரு மாபெரும் சந்தோசம். இதோ இன்றைய சில நகைச்சுவை பகிர்வுகள். இயன்றவரை நகைச்சுவைகளை எங்கு வாசித்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நகைச்சுவைகள் என்பது சிரிப்பதற்காக மட்டுமேத் தவிர ஆராய்ச்சி செய்வதற்காக இல்லை. 

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது 
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் 
அது திறந்து கொள்கிறது 
வாழ்வின்மீது இயற்கை தெளித்த 
வாசனைத் தைலம் சிரிப்பு 
எந்த உதடும் பேசத் தெரிந்த 
சர்வதேச மொழி சிரிப்பு.
என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்தில் வருகின்றன .

யன்ற வரை 
இதழ்கள் பூத்திருங்கள் 
உங்களின் இதயங்கள் சிறகுகலாகட்டும் . 
நீங்கள் சிரிக்க நேர்ந்தால் 
அதில் இன்னும் பல
இதழ்களின் மொட்டுக்கள் மலரக் கூடும் .
புன்னகையும் பூமியில் சுற்றித் தெரியும் 
தென்றலும் ஒன்றுதான் 
நாம் சுவாசிக்கும் தென்றலும் , 
நம்மை சுவாசிக்கும் சிரிப்பும் 
எப்போதும் இந்த உயிர் நீட்டிக்கும் 
-பனித்துளி சங்கர் 
* * * * * * *
புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!
* * * * * * *
“டேம்ல வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே! ஏன்?” “தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?” 
* * * * * * *
சிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்? மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
* * * * * * *
“அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே?” “அதான் கொக்கு நறநற கோழி நறநற…ன்னு பாடுறாரே!”
* * * * * * *
"எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"
"ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்."
* * * * * * *
“தேங்காயிலும் தண்ணீர் இருக்கு……..பூமியிலும் தண்ணீர் இருக்கு……” “அதுக்காக தேங்காயிலதான் போர் போட முடியுமா……. இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா…….இத சொன்னா நம்மள லூசுனு சொல்லுவான்…."அரசியல்வாதியை மாப்பிள்ளையாக்கியது தப்பாப் போச்சு!""ஏன்?""கல்யாணத்தில் பொண்ணு போட்ட மாலையைக் கழற்றி கூட்டத்தில் வீசுறாரு!"
* * * * * * *
ண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தது.

ஒரு உறுப்பினர், “பேருந்தில், யாகாவாராயினும் நாகாக்க என்று எழுதப்பட்டிருக்கிறதே, யாருடைய நாக்கு காக்கப்பட வேண்டும்? பேருந்தின் நடத்துனரா? ஓட்டுனரா? இல்லை பயணிகளா?” என்று முதலமைச்சரான அண்ணாவைப் பார்த்துக் கேட்டார்.

உடனே அண்ணா, “ யாகாவாராயினும் நாகாக்க என்ற குறள், யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவருக்குமே எழுதப்பட்டுள்ளது” என்றார்.
* * * * * * *
நேசத்துடன் 
-பனித்துளி சங்கர்.
* * * * * * *

24 மறுமொழிகள் to சிரிப்பு விற்பவன் - Panithuli shankar tamil kadi jokes - நகைச்சுவை -ஜோக்ஸ்- கடி -காமெடி :