பசி கவிதைகள் > சிதறும் உயிர்கள் - Panithuli shankar varumai kavithaigal in tamil


ணவுகள் எங்கே


 எங்களின் உயிர்களும் அங்கே.
உடை இன்றி பிறந்தோம்
 ஏனோ இந்த உடலின்றி பிறக்க மறந்தோம்..!?

 அழியாத இந்த மண்ணைக்
கட்டியாளத் துடிக்கும் மானுடன்
 ஏனோ நாளை அழியப்போகும்  
  மனிதனை மறந்துபோனான்..!

தேடிக் கிடைபதற்கும்,
உழைத்து உண்பதற்கும்
ஏதும் இல்லாத தூரங்கள்
பார்வைகளில் நிழலாடுகிறது.
  சின்னஞ் சிறு குழந்தையில்
சிறுநீர் கழித்து வாழ்ந்த
என் மக்கள் இன்று கண்முன்
சிறுநீர் குடித்து தாகம் தீர்ப்பதா...!?

பற்றி எரியும் பசியில்
கொன்று உண்பதற்கு என்னை போன்ற
பசிகொண்ட மனிதனைத் தவிர
எதிரே ஒன்றும் இல்லை..!

உணவும்
, உடையும், இருப்பிடமும்தான்,
எங்களின் கனவாகிப் போனது
இந்த மரணம் கூடவா
எங்களின் வாழ்வில்
கானல் நீராகிப்போனது !?

கை நீட்டி கண்ணீர் விடுவதற்கும் ,
வாய் திறந்து கதறி அழுவதற்கும்
உணர்வுகள் இருந்தும்
உடலில் உதிரம் இல்லை.

பசி  எடுக்க மருந்தொன்றுக்
கண்டான் மனிதன்
நாங்கள் பசி மறக்க ஏனோ
மருந்தொன்று காணாமல் மறந்தான்..!!

நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சில நாட்கள்
இந்த பூமியில் சுவாசித்திருக்கும். .!  

உண்ண உணவின்றி மறித்துபோகும் 
இந்த உன்னத வரம் எங்களுடன்
அழிந்துபோகட்டும்.
இயன்றவரை உணவுகளை வீணாக்காதீர்கள்...!!
  
          
                                           - பனித்துளி சங்கர் 24 மறுமொழிகள் to பசி கவிதைகள் > சிதறும் உயிர்கள் - Panithuli shankar varumai kavithaigal in tamil :