ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு - கடி ஜோக்ஸ் கதைகள் - Tamil Jokes - Comedy -SMS Nagaichuvai - Panithuli shankar

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் நீண்ட நாட்களுக்குப்பின் சிரிக்கலாம் வாருங்கள் என்ற பதிவின் வாயிலாக மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தினம் தினம் ஒரே வேலை மூச்சு விடுவதற்குக்கூட நேரம் இல்லை என்று போலியாய் சொல்லிக்கொள்ளும் முகமூடி மனிதர்களுக்கு இந்த சிறிய நகைச்சுவைப் பதிவு சமர்ப்பணம். பொதுவாக சோகங்களை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை என்றபோதிலும் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள மறந்து போய்விடுகிறோம். காரணம் கேட்டால் ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் பதில்கள் தேங்கிக்கிடக்கிறது.
ரி நண்பர்களே..! எதுஎப்படியோ இயன்றவரை தினமும் சிறிது நேரமாவது சிரித்து மகிழுங்கள். நாம் தினமும் ஒரு நிமிடம் சிரிப்பது தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு நிகர் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. ஆராய்ச்சி சொல்வதையா நம்புவது என்று எண்ணத் தோன்றினாலும் சில நேரம் அந்த ஆராய்ச்சிக்குள் மனிதர்களாகிய நமது யதார்த்த வாழ்க்கை அடகுவைக்கப் பட்டிருப்பதையும் மறுக்க முடியாமல் போய்விடுகிறது. சரி நண்பர்களே இதோ நான் சிரித்து மகிழ்ந்த சில நகைச்சுவை துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நீங்களும் சிரித்து பகிர்ந்து மகிழுங்கள். நாம் விதைக்கும் புன்னகை நாளை யாரேனும் ஒருவரின் பகிர்வில் மீண்டும் நமக்கு கிடைத்துப்போகலாம்.

**************

லைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
***************

"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"

"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."
***************

டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.

நிஜமாவா?

ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
****************
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

பையன் :ஹும்... உங்க தங்கையோட லவ்வர் தான்.
***************** 
வளை நினைத்து

ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்

கொடுத்தேன் !

வாங்கி படித்து விட்டு !

கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களா?"
****************
"உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?
****************

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?.
டிராபிக் ஜாம் ஆயிடும் :-)
****************
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெர

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
**************
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
***************
ரீட்சைக்கு பிறகு…
மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற

மாணவன் 2 : thanks to vaasan eye care !!!

***************

"ஆனாலும் நம்ம தலைவர் இப்படி விதண்டாவாதமா பேசக் கூடாது!"
"அப்படி என்னதான் பேசினார்?"

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றத்தையே ஹைடெக்

மருத்துவமனையா மாத்துவோம்'னு பேசறாரே!"

****************
 
"அந்த டாக்டர் ஆபரேஷன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ்

பண்ண மாட்டாரு."

"அடடா, ஆச்சர்யமா இருக்கே!"

"ஆனா, முதல்லேயே ஃபீஸ் எவ்வளவு ஆகும்னு சொல்லிடுவாரு!"
****************

"ஒரு போன் பண்ணிக்கலாமா சிஸ்டர்!"

நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"

**************
லைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

*************** 
பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..
*****************

ப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?

*****************

தோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்…

அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?

பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!

******************
காதலி : சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
காதலன் : இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.!

******************
நேற்று பக்கத்துக்கு வீட்டு பாபுவை ''ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு'' சொன்ன பிறகு எல்லோரும் மூக்கில விரல வைக்கும்படி ஒரு காரியம் செய்துட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

நம்ம தெரு செப்டிக் டாங் தொட்டியை குச்சியால கலக்கிட்டான்.

****************
"கேள்வி கேட்டதுக்காகவா மிஸ் உன்னை அடிச்சாங்க?"

"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."

****************

"ன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"

"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"

*****************
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."

"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"

******************
"பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே

யாருக்கு என்னாச்சு?"

"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
******************
நேசத்துடன்
- பனித்துளி சங்கர்.

45 மறுமொழிகள் to ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு - கடி ஜோக்ஸ் கதைகள் - Tamil Jokes - Comedy -SMS Nagaichuvai - Panithuli shankar :