இதயத்தின் ஓசைகள் - காதல் கவிதைகள் - Panithuli shankar Kadhal kavithaigalடலோடு உயிர்
வருவது காதலா !?
உயிரோடு உடன் வருது காதலா..!
உடல் விற்றேன் மனந்தவளிடம்
இதயம் விற்றேன் என்னை உணர்ந்தளிடம்.....!

ன் அறிமுகத்தின்
முதல் நாள் மீண்டும் ஒரு குழந்தையாய்
இந்த உலகம் மறக்க செய்தாய்....
உந்தன் சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
இன்னும் சிறிது நீளாத
இந்த கணங்கள் என்ற ஏக்கம்
இப்போதும் இதயத்தில் பசுமையாய் !

நீண்ட உரையாடல்களுக்கு இடையினில்
உன் வார்த்தைகள் இல்லாத மவுனத்தில்
பல முறை
அர்த்தம் தேடி தொலைந்து போயிருக்கிறேன் .!

ன் மடி சாய்ந்து உறங்கிப்போன
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
என் வாழ்வில் நான் பெற்ற
மிகப்பெரிய பொக்கிஷம் என்றாகிப்போனது . !

ன் தனிமைகளின் ஒவ்வொரு
இரவுகளும் உன் ஞாபகங்களின்
எல்லைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறது . !

சிறு எறும்பு கடித்து
துடித்துப் போகும் குழந்தை ஒன்றின்
அழுகை சத்தமும்
உன் நினைவுகள் சுமந்து
ரணப்படும் என் இதய சத்தமும்
இப்பொழுதெல்லாம் ஒன்றாகிபோகிறது .!

ன்னுடன் உரையாடி
இந்த உலகம் மறந்த நிமிடங்கள் .
இப்பொழுதெல்லாம் உன் நினைவுகள் சுமந்து
இறந்துபோகத் துடிக்கிறது .!

காதல் செய்வதும்
பிரிந்து அழுவதும்
வாடிக்கையாகிப் போன இந்த உலகத்தில்
நமது கண்ணீரும் இன்னும் சில நாட்களே !.....

-பனித்துளி சங்கர்.

27 மறுமொழிகள் to இதயத்தின் ஓசைகள் - காதல் கவிதைகள் - Panithuli shankar Kadhal kavithaigal :