காத்துக் கிடக்கிறேன் - (Panithulishankar Kavithai - Kaathiruppu)

குடை இல்லாத நேரத்தில்
வந்து செல்லும்
மழை போன்றுதான்
நிகழ்ந்துபோனது
உனது வருகையும்
உன் பார்வையால்
என்னை நனைத்து சென்றாய்.,
சிறு புன்னகையால்
என் இதயம் திருடிச்சென்றாய்.,

மீண்டும் ஒரு மழைக்காக
குடையின்றியே 
காத்துக் கிடக்கிறேன்
உன் வருகையை
உயிரின் இறுதிவரை 
ஏந்திக்கொள்ள !...

-நேசத்துடன்
பனித்துளி சங்கர்-.
* * * * * * *

12 மறுமொழிகள் to காத்துக் கிடக்கிறேன் - (Panithulishankar Kavithai - Kaathiruppu) :