உயிரைத் தின்ற சில நொடிகள் - Panithulishankar kavithaigal - பனித்துளி சங்கர் கவிதைகள்

ழை பொழிகிறது குடையில்லை...
உயிர் கரைகிறது விடையில்லை..
இலவம் பஞ்சாய் இதயம் வெடிக்கிறது...
இந்த இளமைத் தாண்டி உயிர் துடிக்கிறது....

ன் வெட்கம் தானடி
நான் எழுதும் காகிதம்....
உன் பார்வை தானடி
என்னை வெல்லும் ஆயுதம்...
உன் அழகிய நினைவுகள் தானடி
எந்தன் உலகின் சிறந்த ஓவியம்...
தயக் கோப்பையில் காதல் ஊற்றினாய்
என் இயந்திர வாழ்க்கையில்
இளம் பூக்கள் நீட்டினாய்
இரவின் உறக்கத்தில் கனவுகள் வீசினாய்...!

ன் ஞாபகம் தின்றே பசித் தீர்க்கிறேன்
என் நிழல்களில் உனக்கு குடை பிடிக்கிறேன் .
இன்னும் ஏனடி என்னை கொல்லப் பார்க்கிறாய்..!!??
நீ வானவில்லாய் வந்து செல்லும்
சில நொடிகளில்
என் உயிர் மீண்டும்
இந்த உடலில் சேர்க்கிறாய்....!!

- நேசத்துடன் 
பனித்துளி சங்கர் -
* * * * * * *

13 மறுமொழிகள் to உயிரைத் தின்ற சில நொடிகள் - Panithulishankar kavithaigal - பனித்துளி சங்கர் கவிதைகள் :