தனிமைச் சிறையிலும் உயிர்த்தெழும் ஞாபகங்கள்..!! (Panithulishankar - Kavithaigal)

உன்னை தொடர்புகொள்ளும்
ஒவ்வொரு முறையும்
துண்டிக்கப் படுகிறேன்.!
நீ இன்றி நீளும் ஒவ்வொரு இரவுகளிலும்
உன் நினைவுகளால் தண்டிக்கப் படுகிறேன் .!
என் இதயத் துடிப்பின் ஓசையைவிட
உன்னைப் பற்றிய ஞாபகங்களின் ஓசைகள்
சற்று அதிகமாகவே கேட்கிறது
என் தனிமையான உலகத்தில் .!
நிழலோடு வாழ்ந்து நிஜத்தோடு வீழ்ந்து
மறந்தும் மறக்காமல் கடந்து போகிறேன்
நீ இல்லாத வாழ்க்கையை 
தினம் தினம் போலியாய் .!
ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை சத்தமிடும்
கடிகாரத்தின் ஓசையில் 
மீண்டும் துயில் கொண்டுவிடுகிறது
சற்றுமுன்வரை நான் மறந்து போனதாய் நினைத்த
உன் ஞாபகங்கள் !...

-நேசமுடன்
பனித்துளி சங்கர்-
* * * * * * *

7 மறுமொழிகள் to தனிமைச் சிறையிலும் உயிர்த்தெழும் ஞாபகங்கள்..!! (Panithulishankar - Kavithaigal) :