பனித்துளி சங்கரின் கவிதை கிறுக்கல்கள் ..!! (Panithulishankar-Kirukkal Kavithaigal)

லராத மொட்டுகளும்,
முடியாத உன் மௌனங்களும்
ஒன்றுதான் எனக்கு !
மொட்டுக்கள் சில நேரம்
மலராமல் உதிர்ந்துவிடுகிறது.
உன் மௌனங்கள் பல நேரம்
முடியாமல் என்னை கொன்றுவிடுகிறது !
* * * * * *
ரு உடலுக்கு இடைப்பட்ட தூரத்தை
நமது பார்வைகள் அளக்கத் தொடங்கிவிட்டது .
சுவாசம் தொடும் தூரத்தில்
பார்வைகளின் உரையாடல்.
உடைந்த வானம்
கொட்டித் தீர்த்த மழையிலும்
நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
நம் காதல்...!!!
* * * * * * *
த்தனை முறைதான் ஏமாற்றும் 
இந்த அலைகள் உன்னைப்போல் !

எத்தனை முறைதான் ஏமாறும்
இந்தக் கரைகள் என்னைப்போல் !
* * * * * * * 
னக்காக வெகு நேரமாய்
துரத்திப் பிடித்தப் பட்டாம் பூச்சி
உன்னைப் பார்த்ததும்
தானாக வந்துவிட்டது அதுவும்
என்னைப்போலவே !... 
 
* * * * * * *
-பனித்துளி சங்கர் .

20 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதை கிறுக்கல்கள் ..!! (Panithulishankar-Kirukkal Kavithaigal) :