பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல் - மரம் வளர்ப்போம் - Indru oru thagaval Tree articles

0




ரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,

மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.



மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar Kavithaigal NEW - நியூதமிழ் கவிதைகள் - காதல் கவிதைகள் - ஹைக்கூ கவிதைகள் - நட்புக் கவிதை - இயற்க்கை kavith

0




நான்
உன்னையே நினைத்து
செத்துவிட்டேன் -நீயோ
என்னையே நினைத்து
வாழ்ந்து சாகிறாய் ...!



கவிதைக்கும் ..... தத்துவத்துக்கும்....? 
கவிதைக்கும் தத்துவத்துக்கும் சிறு வித்தியாசம் .தான் .........
"காதலிப்பவன்" சொல்வது கவிதை..
"காதலித்தவன்" சொல்வது தத்துவம்.



அவள் படுக்கை அறையில்
கொசுக்களுக்கு வேலை இல்லை
ஏன் எனில்
மலர்ச் சோலையில் பட்டாம் பூச்சிகளே உண்டு.



மௌனம் 
உன்னிடத்தில் எனக்கும் என்னிடத்தில் 
உனக்கும் பேசிக்கொள்ள கோடி வார்த்தைகள் இருந்தும் 
மௌனம் மட்டும் பிடித்திருக்கிறது 
உனக்கும் எனக்கும்.......!!!!



இந்த கடியாரம்
அலுவலகத்தில்: இருக்கும் போது 
மெதுவாகச் சுற்றுகிறாய்!!!!!

காதலியுடன் :இருக்கும் போது
வேகமாகச் சுற்றுகிறாய் !!!!
தனிமையில்: தவிக்கும் போது 
சுழலவே மறுக்கிறாய் !!!!!!!!!!.




மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar Kathaigal - கை கடிகாரம் - Watch - பனித்துளி சங்கர் தன்னம்பிக்கை கதைகள்

0



ரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.

நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.

அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.

பதறாத காரியம் சிதறாது...பொறுமையுடனும் நிதானத்துடனும் நாம் செய்யும் காரியங்கள் சிறப்பாக அமையும் ...தியானம் நம் மனதை தூய்மை படுத்துவதோடு நல்ல புத்துணர்ச்சியையும் தரும்...மன அமைதியை வெளியில் தேடாமல் உங்களுள் உணருங்கள்...:)
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் இன்று ஒரு தகவல் - உலகம் வியந்த நடராஜர் தத்துவம் -Panithuli shankar Tamil Interesting articles

0



விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்!!!!







உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!

பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.

இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!

விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற, அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.

கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.

இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!

அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:

"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)

இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)

செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!
மேலும் வாசிக்க.. >>

கவிஞர் பனித்துளி சங்கர் கதைகள் - Panithuli shankar tamil kathaigal

0



ழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் எனக்கு தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நீயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமலேயே வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்.
மேலும் வாசிக்க.. >>

Kaadhal Kavithai - Dr.Panithulishankar

0



எனக்கான காதல் என் தலையணையில்
ஆரம்பித்து போர்வைக்குள்
முடிந்து விடுகிறது கண்ணீராகவும்,
கனவுகளாகவும்.


கண் பரிசோதனை செய்ய விரும்பினேன்
பகலில் நிலவை கண்டதற்கு !!!!
இனிமேலாவது மொட்டை மாடியிலிருந்து
என்னை பார்க்காதே !!!!!!



தாயின் கருவறையோ
பத்து மாசம்
உனது "இதயம்"என்ற
கருவறையோ
ஆயுள் முழுவதும்
மேலும் வாசிக்க.. >>

கவிஞர் பனித்துளி சங்கர் - தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems SMS - Panithuli shankar tamil beautiful love poems

0



கரையான்களை மிக கொடியவை .... ......
என் இதயத்தை அரித்துக்கொண்டு
உன் நினைவுகள் ...


நேசிக்க மறந்த நெஞ்சம்......... 
சுவாசிக்க மறந்த இதயத்திற்கு
நேசிக்க கற்றுக்கொடுத்தாய்-அது
உன்னால் காயப்பட்டதாலோ என்னவோ,
மற்ற யாரையுமே நேசிக்க மறுத்துவிட்டது......


உடை..!! 
உங்களை பார்க்கும்படி
இருக்கவேண்டும்
"உங்களையே" பார்க்கும்படி
இருக்கவேண்டாம்..!!



சுமைகள் ! 
இது மனதில் ஒளிந்திருக்கும்
மாற்றமில்லாத அழுத்தம்

தேவைகள் கூடும்போது - இந்த
சுமைகள் இன்னும் அதிகமாகும்

எல்லோரிடமும் ஒட்டிக்கொள்ளும்
ஏதாவது ஒரு நிலையில்

சுமைகள் !
இது தூக்கி நடக்கும் வரை அல்ல
தூரத்தை கடக்கும் வரைதான் .



அம்மாவின் மடியிலோர் குட்டித்
தூக்கம்
நீடிக்க விடாத வேகத் தடை
நின்று கொண்டே பேருந்தில்
பயணம் ...!


என் கண்கள் என்ன கால்
டாக்ஸி யா?
உன்னை சாலை முனை வரை விட்டு
திரும்புகின்றன ...!



மாலை ஐந்து மணிக்கு
சந்திக்கலாம் என்றவுடன்.
வழக்கத்துக்கு மாறாக
கடிகாரம் இன்று
வேகமாக ஓட தொடிங்கியது.



மெல்லிய வெயில்
ஏசியின் மிதமான குளிர்
ஒரு கோப்பைத் தேநீர்- அறையில்
நானும் அவனும்
தேநீர் தீர்ந்தும்
பேசப்படாத வார்த்தைகள்
மீதமிருந்தது
நண்பர்களாயிருந்ததால்....!



எட்டாவது சுரத்தை தேடும்
இசைக் கலைஞர்களுக்கு
இன்னும் எட்டவில்லையோ
என்னவளின் மெட்டி சத்தம்?




நீளும் பொழுதுகளில்
நீச்சலாடும் பார்வைகளில்
பயணமாகிறது காதல்
பார்வைகள் சங்கமிக்கும்
சாயங்கால பொழுதுகளில்
சத்தமில்லாமல் பூக்கிறது காதல்
சற்று என்றே
தீர்ந்துவிடும் அரவணைப்பில்
அழகாகிறது காதல்
புதிது புதிதாக
பூக்கும் ஆசைகளால்
கலையாமல் கலையாகிறது
கண்ணியக் காதல்...



என் காதலி
நானும் உன் விழிகள் போல்தான்
நீ கண் விழிக்கும் முன் நானும்
விழிக்கிறேன் உன்னை காண ,,,,,




திருமணத்துக்கோ வேறு சுபகாரியத்துக்கோ
செல்லும்
போது ...ஏமாற்றுவதற்காக ..
ஒன்றுமே இல்லாத
ஒரு பெட்டியை அழகாக சுற்றி
அழகாக
கொடுப்பது வேடிக்கைக்கு மட்டும்
அல்ல
என் நிலையும் அதுதான்
நண்பனே ....!


உன் வாழ்க்கையில் பலரின்
வருகை மகிழ்ச்சியை தரலாம் ....
ஆனால்
எந்த ஒருவரின் வருகையால் ...உன்
வாழ்கை முழுமை அடைந்ததாய் நீ
உணர்கிரையோ ..
அவளே உன் உயிர் தோழி ..



அழகானவளே,,,,,
நீலம்பூத்த வானமா,,,!!!
உன் விழிகள்
காற்றிலே அசைகின்ற
கடல் அலையா,,,!!!
உன் ஆடைகள்
மணற் சுமந்த
பாலைவனமா,,,!!!





நீ எறிந்த காகிதம்

நான் உனக்கு கொடுக்கும்
காதல் கடிதங்கள் எல்லாம் - நீ
எரிகிறாய் இல்லை எரிக்கிறாய்.
அவற்றின் மிச்சங்களை கூட
பத்திரமாக வைத்துள்ளேன்
உன் விரல்கள் தீண்டியதால்...




மேலும் வாசிக்க.. >>

புதிய காதல் கவிதைகள் - பனித்துளி சங்கர்

0

காதல் பூ 
ஒரு வன்னத்து பூச்சி
உன்னை பார்த்து என்னிடம்
கேட்கிறது ஏன் இந்த பூ
நகற்ந்து கோண்டே இருக்கிண்றது
என்று?
மேலும் வாசிக்க.. >>

Tamil Kadhal Kavithai - Panithulishankar - கூந்தல் ரோஜா

2



தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா.........!!!
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல் - கொலைகாரன் சவப்பெட்டி

0



னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி ! 

லா ஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியை கொலை செய்தவனின் சவப்பெட்டி ரூ . 39 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது .
லீ ஹார்வே ஆஸ்வல்டு என்பவனால் ஜான் எப். கென்னடி கடந்த 1963 ம் ஆண்டு, நவம்பர் 22 -ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் . பின்னர், 

போலீசாரால் கைது செய்யப்பட்ட லீ, 2 நாட்கள் கழித்து ஜாக் ரபி என்பவரால் கொலை செய்யப்பட்டான் . லீ இறந்த பின் அவனது உடல் டெக்சாஸ் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது .

இந்த நிலையில் லீ -ஐ அடக்கம் செய்ய பயன்படுத்திய மரத்திலான எளிய சவப்பெட்டி ஏலம் விடப்பட்டது . ஏலத்தின் போது 2 நபர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது . இறுதியில் அந்த சவப்பெட்டி ரூ. 39 லட்சத்துக்கு ஏலம் போனது .

மேலும் வாசிக்க.. >>

வலை பாயுதே - கவிஞர் பனித்துளி சங்கர் நன்றி ! நன்றி !

0


மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar - indru oru thagaval book - ஜெமினி இரட்டையர் - பனித்துளி சங்கர் சினிமா தகவல்கள்

0



னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி . தற்போதைய சூழலில் சினிமா என்பது நம்மில் பலருக்கு எதோ ஒரு சாதாரண முயற்சியாகத் தோன்றலாம் . ஆனால் ஒரு காலத்தில் சினிமா என்பது நமக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு ஒரு அதிசயமாகவே இருந்துவந்தது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை . சரி இன்றையத் தகவலுக்கும் சினிமாவிற்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எல்லாம் .

நீங்கள் அந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, ஜெமினி இரட்டையரை நிச்சயம் அறிந்திருப்பீர்கள் . பழைய கருப்பு, வெள்ளைப் படங்களை டி. வி. யில் பார்க்கும்போது ஜெமினி ஸ்டுடியோவின் பீப்பி ஊதும், ஜட்டி மட்டுமே அணிந்த இரட்டையர் சின்னத்தைப் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பேயில்லை .
அந்தச் சின்னத்துக்கான ஐடியா, ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ். எஸ். வாசனுக்கு எங்கிருந்து வந்தது ?
ஜெமினி என்பது நட்சத்திரம் . ஜெமினி என்ற சொல் லத்தீன் மொழியைச் சார்ந்தது . அச்சொல்லுக்கே இரட்டையர் என்பதுதான் பொருள் . கேஸ்டர் மற்றும் போலகஸ் என்ற இரட்டை
நட்சத்திரங்கள் இணைந்ததுதான் ஜெமினி . கேஸ்டரும், போலக்ஸும் இரட்டையர். கிரேக்கப் புராணத்து கதை மாந்தர்கள் . ஒரே தாய் . ஆனால், வேறு வேறு தந்தை என்பதாக வித்தியாசமான கதை உண்டு . அக்காலத்தில் மாலுமிகளுக்கு இரவில் திசை காட்டும் நட்சத்திரமாக ஜெமினிதான் இருந்துவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . என்ன நண்பர்களே இன்றையத் தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு அறியத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் . 

என்றும் நேசத்துடன் 
பனித்துளி சங்கர்.










மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் - இன்று ஒரு தகவல் - வியக்கவைக்கும் இந்தியாவின் சிறப்புகள் - India Indru oru thagaval

2







னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி . நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை

* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.

* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.

* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.

* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, "போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர்.

உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...

இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!
மேலும் வாசிக்க.. >>

தினம் ஒரு தகவல் - பேரறிஞர் அண்ணா - கவிஞர் பனித்துளி சங்கர் - Indru oru thagaval - ARIGNAR ANNA

0

ன்பின் அனைத்து உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கம் உங்கள் அனைவரையும் நீண்ட நாட்களுக்குபிறகு மீண்டும் தினம் ஒரு தகவலில் சந்திப்பதில் மகிழ்ச்சி ! 

சரி நாம் நேராக மேட்டருக்கு  வருவோம் " நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்வதில் தவறு இல்லை . அறிஞர் அண்ணா அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டபோது, ' இன்னும் ஒரு நாள் அதைத் தள்ளிப்போட முடியாதா ? ' என்று கேட்டார் அண்ணா . ' நீங்கள்தான் பகுத்தறிவுவாதி ஆயிற்றே , நீங்களூமா நல்ல நாள் எல்லாம் பார்க்கிறீர்கள் ? ' என்று சிரித்தபடியே கேட்டார் அமெரிக்க மருத்துவர் . ' ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . இன்னும் ஒரு நாளில் முடித்துவிடுவேன் . அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது . அதனால்தான் அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட விரும்புகிறேன் ' என்றார் .
பகத்சிங்கைத் தூக்குத் தண்டனைக்காக அழைத்தபோதுகூட, ' இந்த புத்தகத்தின் இன்னும் சில பக்கங்களைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன் ' என்றார் . அண்ணாவுக்கு மறுநாள் குறித்து நிச்சயம் கிடையாது . பக்த்சிங்குக்கோ மரணமே நிச்சயமாக இருந்தது . மரணம் குறித்தே கவலைப்படாமல் வாசித்தவர்கள் அவர்கள். வாசிக்கும்போது வாழ்க்கையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? "



மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் ரசித்தது - முதியோர் இல்லம் ஒரு தந்தையின் புலம்பல் - Muthiyor illam - Panithuli shankar

1



ன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி
 நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே 
இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை 
என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்
உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு
உறவுகள் இதுதானென்று!



மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கர் தமிழ் – அமீரகம் தமிழ்ச்சங்கம் : தமிழர்களின் சிறப்பு

1




  அமீரகம் என்பது அபுதாபிதுபாய்ஷார்ஜாஅஜ்மான்ரஸ்அல்கைமாபுஜைராஉம்அல் குவைன் ஆகிய ஏழு நாடுகளின் ஒருங்கிணைப்பு! தலைநகரம் அபுதாபி, ஆட்சி மொழி அராபிக்.


  மொத்த மக்கள் தொகை 80 லட்சம். அதில் இந்தியர்களின் எண்ணிக்கை - 20 லட்சம். மொத்த தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 லட்சம் (இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து). பெரும்பாலான தமிழர்கள் தமிழ் முஸ்லிம்கள். 


  பெட்ரோல் உற்பத்தியானது நாட்டின் பொருளாதாரத்தில் 33%  சதவிகிதம் கொண்டது. சவுதி அரேபியாஈரான் நாடுகளுக்கு அடுத்து அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு!

அமீரகம் தமிழ்ச்சங்கம்:

  U.A.E தமிழ்ச் சங்கம் 2008- ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது! பல்வேறு கலைஇசைவிளையாட்டு நிகழ்ச்சிகளை அமீரகத்தில் நடத்தி வருகின்றது. மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துகின்றது.
இணையதள முகவரி : http://www.uaetamilsangam.com

தமிழ் உணவகங்கள்:

  போகும் இடங்களிலெல்லாம் தமிழ் உணவகங்களைக் காணலாம்! நம் ஊரின் சரவணபவன், ஆர்யாஸ், ஆச்சி செட்டிநாடுசிவ்ஸ்டார்பவன்அஞ்சப்பர், மயூரா என அனைத்து முன்னணி உணவகங்கள் ஒவ்வொன்றும்  ஒன்று முதல் பதினைந்துக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருக்கின்றன.

கல்வியில் தமிழ்:

  அமீரகத்தில் உள்ள பெரும்பாலான அனைத்து இந்திய கல்வி நிலையங்களும் இரண்டாம்நிலை மொழியாக தமிழைக் கற்றுக்கொள்ளல்லாம். (அல்லது ஹிந்திமலையாளம்உருது ஆகியவையும் கற்றுக்கொள்ளலாம்!) கல்வி அடிப்படை மொழி ஆங்கிலம்!


பண்பாடு:

  இஸ்லாமிய மதம் அங்கீகரிக்கப்பட்ட மதம். நாட்டின் எல்லா இடங்களிலும் பள்ளிவாசல்களைக் காணலாம்! மேலும் 31 கிருத்துவ சர்ச்களும் சிவன் கோவிலும் உள்ளது. சிவன் கோவில் (சாய்பாபா கோவில்) பர்துபாயின் தேரா ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது! இந்த கோவிலில் பூஜைக்குத் தேவையான கடை வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இங்கு ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், ஜூனியர் விகடன் உட்பட அனைத்து தமிழ் வார இதழ்களும் கிடைக்கும்!



 ரேடியோ ஹலோ 89.5  தமிழ் எப்.எம்:

  தினத்தந்தி குழுமத்தின் ரேடியோ ஹலோ எப்.எம் 2011ம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்டது. 24 மணி நேர சேவை ஒளிபரப்பு - அமீரகம் முழுவதும் கேட்கலாம்! இப்பொழுது அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலக்கிக்கொண்டிருக்கின்றனர்!
சமூகதள முகவரி - https://www.facebook.com/radio895fm

தமிழ் கலை நிகழ்ச்சிகள்:

  ஒவ்வொரு மாதமும் தமிழ் கலை நிகழ்ச்சிகளுக்குப்பஞ்சமிருக்காது. பெரும்பாலான அனைத்து இசை அமைப்பாளர்கள்பாடகர்கள்நடிகர்கள் என கலை நிகழ்ச்சி நடத்தாதவர்களே கிடையாது. ரஹ்மான்ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து கலைஞர்களும் இங்கு கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்!

தமிழ் திரைப்படங்கள்:

  தமிழில் வெளியாகும் அனைத்து புதிய திரைப்படங்களும் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிடும்! நம்மூரைப்போல் ப்ளாக்கில் டிக்கெட் கிடைக்காது. பால் அபிசேகம் பண்ண முடியாது!

நன்றி - நிலாப்பெண்
மேலும் வாசிக்க.. >>